சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
கேரளாவின் குதிரன் சுரங்கத்தின் ஒரு பகுதியை திறக்க மத்திய அமைச்சர் திரு நிதின் கட்காரி உத்தரவு
प्रविष्टि तिथि:
01 AUG 2021 2:22PM by PIB Chennai
கேரளாவில் உள்ள குதிரன் சுரங்கத்தின் ஒரு பகுதியை பயன்பாட்டிற்கு திறந்துவிடுமாறு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்காரி சுட்டுரைச் செய்தியில் நேற்று உத்தரவிட்டார். மாநிலத்தின் முதல் சுரங்க சாலையான இதன் வாயிலாக தமிழகம் மற்றும் கர்நாடகாவிற்கான இணைப்பு பெருமளவு மேம்படும். பீச்சி-வசஹனி வன உயிரின சரணாலயம் வழியாக செல்லும் வகையில் 1.6 கிலோமீட்டர் தூர சுரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வன உயிரினங்களுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் வடக்கு மற்றும் தெற்கு வழித்தடங்களில் உள்ள முக்கியமான துறைமுகங்கள் மற்றும் நகரங்களிடையேயான சாலை இணைப்பை இந்த சுரங்கம் வலுப்படுத்தும்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் நாட்டில் மாறி வரும் உள்கட்டமைப்பு வசதிகள், ஒவ்வொரு குடிமகனுக்கும் சிறந்த பொருளாதார வாய்ப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்கிறது என்று திரு கட்காரி தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1741243
*****************
(रिलीज़ आईडी: 1741280)
आगंतुक पटल : 410