பிரதமர் அலுவலகம்

டிஜிட்டல் கட்டண முறையான இ-ருபியை ஆகஸ்ட் 2ம் தேதி பிரதமர் தொடங்கிவைக்கிறார்

Posted On: 31 JUL 2021 8:23PM by PIB Chennai

இ-ருபி என்ற ஒரு நபர் மற்றும் குறிப்பிட்ட தேவைக்கான டிஜிட்டல் கட்டண தீர்வு முறையை பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆகஸ்ட் 2ம் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.

டிஜிட்டல் நடவடிக்கைகளில் பிரதமர் எப்போதும் சாம்பியனாக உள்ளார். பல ஆண்டுகளாக, அரசுக்கும் பயனாளிக்கும் இடையே, குறிப்பிட்ட விவரங்களுடன் இலக்குகள் மற்றும் ஆதார கசிவு இல்லாமல் அதன் நோக்கம் பயனாளிகளுக்கு சென்றடைவதை உறுதி செய்ய பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. சிறந்த நிர்வாகத்தின் இந்த தொலைநோக்கை, மின்னணு சான்று என்ற கருத்து முன்னெடுத்து செல்கிறது. 

 இ-ருபி பற்றி :

இ-ருபி என்பது டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதற்கான ரொக்கமில்லா மற்றும் தொடர்பில்லா சாதனம். இது  க்யூஆர் குறியீடு அல்லது எஸ்எம்எஸ் அடிப்படையிலான மின்னணு -சான்று. இது பயனாளிகளின் செல்போனுக்கு அனுப்பப்படுகிறது.   இந்த தடையற்ற, ஒரே முறை பணம் செலுத்தும் பொறிமுறையை பயன்படுத்துபவர்கள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு இல்லாமல், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் செயலி இல்லாமல் அல்லது நெட் பேங்கிங் முறையை பயன்படுத்தாமல், மின்னணு சான்று மூலம் சேவை அளிப்பவரிடம் பணம் செலுத்த முடியும்.  இதை யுபிஐ தளத்தில், நேஷனல் பேமென்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, நிதி சேவைகள் துறை, மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மற்றும் தேசிய சுகாதார ஆணையம் ஆகியவற்றுடன் இணைந்து உருவாக்கியுள்ளது.

இந்த இ-ருபி, இந்த சேவைகளுக்கு ஆதரவு அளிப்பவர்களை, பயனாளிகளுடன் இணைக்கிறது மற்றும் சேவை அளிப்பவர்களையும் நேரடி தலையீடு இன்றி டிஜிட்டல் முறையில் இணைக்கிறது. பரிவர்த்தனை முடிந்தால் மட்டுமே, சேவை அளிப்பவருக்கு பணம் செலுத்தப்படுவதை இது உறுதி செய்கிறது. முன்கூட்டியே பணம் செலுத்தப்படும்(ப்ரீ-பெய்டு) முறையாக இது இருப்பதால், எந்த நடுவர் தலையீடும் இன்றி, சேவை அளிப்பவருக்கு குறித்த நேரத்தில் பணம் செலுத்தப்படுவதை இது உறுதி செய்கிறது.  

நலன்சார்ந்த சேவைகளை வழங்குவதில்  ஆதார கசிவு இல்லாமல் இருப்பதை உறுதி செய்யும் நோக்கில், இது புரட்சிகரமான முயற்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தாய் சேய் நலத்திட்டங்கள், டி.பி ஒழிப்பு திட்டங்கள், ஆயுஸ்மான் பாரத் பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் மருந்துகள் மற்றும் பரிசோதனை, உர மானியம் போன்ற திட்டங்களின் சேவைகளை வழங்கவும் இதை பயன்படுத்த முடியும்.  ஊழியர்களின் நலன் மற்றும் கார்ப்பரேட் சமூக பொறுப்பு திட்டங்களின் ஒரு பகுதியாகவும் இந்த டிஜிட்டல் சான்றுகளை தனியார் நிறுவனங்கள் கூட  பயன்படுத்த முடியும்.

*****************(Release ID: 1741147) Visitor Counter : 574