பிரதமர் அலுவலகம்

சிஆர்பிஎஃப் அமைப்பு நாளில் சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

இடுகை இடப்பட்ட நாள்: 27 JUL 2021 9:42AM by PIB Chennai

மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) அமைக்கப்பட்ட நாளான இன்று சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்துணிவு மிக்க சிஆர்பிஎஃப் வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் நல்வாழ்த்துகள். மத்திய ரிசர்வ் காவல் படை, வீரத்திற்கும், தொழில்திறனுக்கும் பெயர் பெற்றது. இந்தியாவின் பாதுகாப்புப் பணியில் இந்தப்படை முக்கிய பங்காற்றுகிறது. தேச ஒற்றுமைக்காக அவர்கள் ஆற்றும் பணியும் பாராட்டத்தக்கதுஎன்று கூறியுள்ளார்.


(வெளியீட்டு அடையாள எண்: 1739342) வருகையாளர் எண்ணிக்கை : 318