கப்பல் போக்குவரத்து அமைச்சகம்
தமிழகம் உள்ளிட்ட கடலோர மாநிலங்களில் ரோபாக்ஸ் மற்றும் நீர் டாக்சி சேவைகள்
Posted On:
26 JUL 2021 3:24PM by PIB Chennai
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் இணை அமைச்சர் திரு சாந்தனு தாக்கூர் கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
நீர்வழி போக்குவரத்து என்பது செலவு குறைவானதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும் இருக்கும் நிலையில், ரோபாக்ஸ் திட்டங்களை பல்வேறு வழித்தடங்களில் சாகர் மாலா திட்டத்தின் கீழ் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது.
நாடு முழுவதும் 7 திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டு, 14 திட்டங்கள் செயல்படுத்துதலின் கீழும் 50 திட்டங்கள் உருவாக்கத்திலும் (மொத்தம் 70) உள்ள நிலையில் தமிழ்நாட்டில் 3 திட்டங்கள் உருவாக்கத்தில் உள்ளன.
இந்திய துறைமுகங்கள் வரைவு மசோதா 2020-ஐ பொது மக்கள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களின் ஆலோசனைக்காக மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் வெளியிட்டது.
பெறப்பட்டுள்ள ஆலோசனைகளை அமைச்சகம் கவனமாக பரீசிலித்து வருகிறது. இந்திய துறைமுகங்கள் சட்டம் 2021-ல் அவை முறையாக சேர்க்கப்படும். சில மாநில அரசுகளிடம் இருந்து ஆலோசனைகள் இன்னும் வரவில்லை.
திறன் இடைவெளி ஆய்வு 21 கடலோர மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டது. துறைமுகம் மற்றும் கடல்சார் துறைக்கு சிறப்பு கவனம் வழங்கப்பட்டது. ஆந்திரப் பிரதேசத்தில் விசாகப்பட்டினம் மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
கட்டுமானம், சரக்கு போக்குவரத்து, சுற்றுலா மற்றும் உற்பத்தி ஆகிய துறைகளில் திறன்மிக்க பணியாளர்களுக்கான தேவை இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது.
பல்திறன் மேம்பாட்டு மையத்தை விசாகப்பட்டினம் துறைமுக பொறுப்பு கழகத்தில் நிறுவ முடிவெடுக்கப்பட்டது. செயல்படுத்துதல் மற்றும் மேலாண்மை பங்குதாரரும் தேர்ந்தெடுக்கப்பட்டு, விசாகப்பட்டினம் துறைமுக பொறுப்பு கழகத்தில் உள்ள கட்டிடம் பங்குதாரரிடம் வழங்கப்பட்டு விட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739059
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739056
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1739054
------
(Release ID: 1739198)
Visitor Counter : 301