பாதுகாப்பு அமைச்சகம்

கார்கில் வெற்றி தினத்தில், தேசிய போர் நினைவு சின்னத்தில் உயிர் நீத்த வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மரியாதை

Posted On: 26 JUL 2021 12:45PM by PIB Chennai

கார்கில் வெற்றியின் 22வது ஆண்டு தினத்தில் தில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில், உயிர் நீத்த வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் இன்று(ஜூலை 26ம் தேதிநன்றி தெரிவித்தார்.  கடந்த 1999ம் ஆண்டு நடந்த கார்கில் மோதலில், ஆபரேஷன் விஜய் நடவடிக்கையின் போது நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த வீரர்களுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

தேசிய போர் நினைவிடத்தில் உள்ள பார்வையாளர் புத்தகத்தில், திரு ராஜ்நாத் சிங் குறிப்பிடுகையில், ‘‘ இந்திய பாதுகாப்பு படையினரின் தியாகத்தை நாடு ஒருபோதும் மறவாது’’ என்றார். அவர்களின் வீரத்துக்கு நாடு நன்றியுடன் எப்போதும் கடன்பட்டுள்ளது, அவர்களின் கொள்கைகளை நாடு எப்போதும் பின்பற்றும் என அவர் மேலும் கூறினார்

இது குறித்து சுட்டுரையில் கருத்து தெரிவித்த பாதுகாப்புத்துறை அமைச்சர், ‘‘ தைரியமான வீரர்களின் உன்னத தியாகம், வரும் தலைமுறையினரையும் ஊக்குவிக்கும்’’ என  கூறியுள்ளார்.

பாதுகாப்புத்துறை இணையமைச்சர் திரு அஜய் பட், விமானப்படை தளபதி ஏர் சீப் மார்ஷல் ஆர்கேஎஸ் பதாரியா, ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே, பாதுகாப்புத்துறை செயலாளர் டாக்டர் அஜய்குமார் மற்றும் ஒருங்கிணைந்த பாதுகாப்பு படை  தலைவர் வைஸ் அட்மிரல் அதுல் குமார் ஜெயின் ஆகியோர் தேசிய போர்வீரர் நினைவு சின்னத்தில் உயிர்நீத்த வீரர்களுக்காக மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் மத்திய அரசு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சக அதிகாரிகள் பங்கேற்றனர்.

கார்கில் மோதலில், இந்திய ராணுவ வீரர்கள், விமானப்படை உதவியுடன், கார்கில் மலைப் பகுதியில் மோசமான வானிலையிலும் எதிரிகளுடன் சண்டையிட்டு விரட்டியடித்தனர்இந்த முக்கியமான தருணத்தில், பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கார்கில் வெற்றியை கொண்டாடி, உயிர்நீத்த வீரர்களை பெருமை மிக்க நாடு நினைவுக்கூர்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1738983

******
 

(Release ID: 1738983)



(Release ID: 1739038) Visitor Counter : 179