பிரதமர் அலுவலகம்
ஆஷாத பூர்ணிமா- தம்மா சக்கர தின நிகழ்ச்சியில் பிரதமரின் செய்தி
கொரோனா பெருந்தொற்று காலத்தில் பகவான் புத்தர் மிகவும் பொருத்தமாக உள்ளார்: பிரதமர்
புத்தர் காட்டிய வழியைப் பின்பற்றினால் கடினமான சவாலையும் எவ்வாறு நம்மால் எதிர்கொள்ள முடியுமென்பதை இந்தியா உணர்த்தியுள்ளது: பிரதமர்
அவரது போதனைகளின் சக்தியை நெருக்கடியான சூழலில் உலகம் உணர்ந்துள்ளது: பிரதமர்
Posted On:
24 JUL 2021 8:58AM by PIB Chennai
இன்றைய கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் பகவான் புத்தர் மிகவும் பொருத்தமாக இருப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். புத்தர் காட்டிய வழியை பின்பற்றினால் எவ்வளவு கடினமான சவாலையும் நம்மால் எவ்வாறு எதிர்கொள்ள முடியும் என்பதை இந்தியா உணர்த்தியுள்ளது. புத்தரின் போதனைகளை ஒட்டுமொத்த உலகமும் ஒற்றுமையாகப் பின்பற்றுகிறது. இதில், சர்வதேச புத்தமத கூட்டமைப்பின் முன்முயற்சியான 'பிரார்த்தனையுடன் அன்பு செலுத்துதல்' பாராட்டுக்குரியது என்று ஆஷாத பூர்ணிமா- தம்மா சக்கர தின நிகழ்ச்சியில் தமது உரையின் போது பிரதமர் தெரிவித்தார்.
நமது மனம், பேச்சு மற்றும் தீர்வு மற்றும் நமது செயல் மற்றும் முயற்சிகளுக்கு இடையேயான இணக்கம், துன்பத்திலிருந்து விலகி மகிழ்ச்சியை நோக்கி செல்வதற்கு நமக்கு வழிகாட்டும் என்று பிரதமர் கூறினார். இது, நல்ல காலங்களில் பொது நலனுக்காக பணியாற்ற நம்மை ஊக்குவிப்பதுடன், கடினமான தருணங்களில் அவற்றை எதிர்கொள்வதற்கான வலிமையையும் நமக்கு அளிக்கிறது. இந்த நோக்கத்தை அடைவதற்கு பகவான் புத்தர் எண்வகை வழிகளை வழங்கியுள்ளார் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
அர்ப்பணிப்பு மற்றும் சகிப்புத் தன்மையில் வேரூன்றி இருந்த போது புத்தர் இவ்வாறு பேசியதால், இவை வெறும் வார்த்தைகள் மட்டுமல்ல, தர்மத்தின் முழு சுழற்சியின் துவக்கமாகவும், அவரிடமிருந்து பிறக்கும் ஞானம், உலக நல்வாழ்விற்கு இணையானதாகவும் மாறுகிறது. அதனால் தான் உலகம் முழுவதும் உள்ள மக்கள் இன்று அவரை பின்பற்றுகிறார்கள் என்று பிரதமர் தெரிவித்தார்.
‘தர்மத்தின் பாதையை’ குறிப்பிட்ட திரு மோடி, பகைமை, பகைமையைத் தணிக்காது என்று தெரிவித்தார். மாறாக, அன்பு மற்றும் பெரும் மனதினால் பகை தணிகிறது. நெருக்கடியான சூழ்நிலைகளில் அன்பு மற்றும் இணக்கத்தின் ஆற்றலை உலகம் உணர்ந்துள்ளது. புத்தரைப் பற்றிய இந்த அறிவினால், மனித சமூகத்தின் இந்த அனுபவம் பலமடைந்து, புதிய வெற்றி மற்றும் செழிப்பின் புதிய உச்சத்தை உலகம் அடையும் என்று கூறி பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.
*****************
(Release ID: 1738537)
Visitor Counter : 248
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam