பிரதமர் அலுவலகம்

டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு ஜப்பான் பிரதமருக்கு பிரதமர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 23 JUL 2021 1:00PM by PIB Chennai

டோக்கியோ ஒலிம்பிக் 2020க்காக ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுட்டுரை வாயிலாக வெளியிட்டுள்ள செய்தியில், "டோக்கியோ 2020 ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராலிம்பிக்ஸை மிகச் சிறப்பாக நடத்துவதற்கு பிரதமர் யோஷிஹைட் சுகாவுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில், உலகின் சிறந்த விளையாட்டு வீரர்களின் நம்பமுடியாத சாதனை நிகழ்வுகளை நாங்கள் எதிர்நோக்குகிறோம் " என்று கூறியுள்ளார்.


(வெளியீட்டு அடையாள எண்: 1738074) வருகையாளர் எண்ணிக்கை : 262