மத்திய அமைச்சரவை

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு ஒருங்கிணைந்த பல்-நோக்கு கார்பரேஷன் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 22 JUL 2021 4:24PM by PIB Chennai

லடாக் யூனியன் பிரதேசத்துக்கு, ஒருங்கிணைந்த பல்நோக்கு உள்கட்டமைப்பு வளர்ச்சி கார்பரேஷன் அமைக்க, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

இந்த கார்பரேஷனுக்கு நிர்வாக இயக்குனர் பதவியை ரூ.1,44,200 - 2,18,200  என்ற சம்பளத்தில் உருவாக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்த கார்பரேஷனின் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு பங்கு ரூ.25 கோடியாக இருக்கும், இதன் செலவு ஆண்டுக்கு ரூ.2.42 கோடியாக இருக்கும். இது புதிய நிறுவனம். தற்போது, இது போன்ற அமைப்பு, புதிதாக உருவாக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தில் இல்லைஇந்த ஒப்புதல் மூலம் பலவித வளர்ச்சி பணிகளை கார்பரேஷன் மேற்கொள்ளவுள்ளதால்வேலை வாய்ப்புகள் உருவாகும்தொழில்துறை, சுற்றுலா, போக்குவரத்து மற்றும் உள்ளூர் பொருட்கள் மற்றும் கைவினை பொருட்களின் விற்பனைக்காக இந்த கார்பரேஷன் பணியாற்றும்.  

லடாக்கில் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கிய கட்டுமான முகமையாக இந்த கார்பரேஷன் பணியாற்றும்.

இந்த கார்பரேஷன் அமைப்பதன் மூலம், லடாக் யூனியன் பிரதேசத்தில் ஒருங்கிணைந்த வளர்ச்சி ஏற்படும். இப்பகுதி மக்களுக்கு சமூக பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்யும்.

இந்த வளர்ச்சியின் தாக்கம் பல கோணங்களில் இருக்கும். மனித வளங்களின் மேம்பாட்டுக்கு இது உதவும்சரக்குகள் மற்றும் சேவைகளின் உள்நாட்டு உற்பத்தி மற்றும் சுமூகமான விநியோகத்தை  அதிகரிக்கும். அந்த வகையில், இந்த ஒப்புதல், தற்சார்பு இந்தியா இலக்கை அடைய உதவும்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737736

                                                                                      -----


(Release ID: 1737781) Visitor Counter : 347