சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
இந்தியாவில் செலுத்தப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 41.78 கோடியைக் கடந்தது
இடுகை இடப்பட்ட நாள்:
22 JUL 2021 12:04PM by PIB Chennai
இந்தியாவில் செலுத்தப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகளின் எண்ணிக்கை 41.78 கோடியைக் கடந்தது. இன்று காலை 7 மணி வரை 51,60,995 அமர்வுகள் மூலம் 41,78,51,151 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 22,77,679 தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
கொவிட் தொற்றிலிருந்து இதுவரை 3,04,29,339 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 38,652 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோரின் ஒட்டு மொத்த சதவீதம் 97.35 சதவீதமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் தினசரி பாதிப்பு 41,383-ஆக உள்ளது.
தொடர்ந்து 25 நாட்களாக தினசரி கொவிட் பாதிப்பு 50,000க்கும் கீழ் உள்ளது.
நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, 4,09,394. இது மொத்த பாதிப்பில் 1.31% சதவீதம்.
கடந்த 24 மணி நேரத்தில், 17,18,439 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. நாட்டில் இதுவரை மொத்தம் 45.09 கோடிக்கும் மேற்பட்ட (45,09,11,712) பரிசோதனைகள் செய்யப்பட்டன.
வாராந்திர கொவிட் பாதிப்பு வீதம் 2.12 சதவீதமாகவும், தினசரி பாதிப்பு வீதம் 2.41 சதவீதமாகவும் உள்ளது. தினசரி பாதிப்பு வீதம், 31 நாட்களாக 3 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1737637
(வெளியீட்டு அடையாள எண்: 1737665)
வருகையாளர் எண்ணிக்கை : 270
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam