குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து
Posted On:
20 JUL 2021 3:30PM by PIB Chennai
நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது -
‘‘ பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தியாகத் திருநாளான பக்ரீத், கடவுள் மீதான இறுதி பக்தியை எடுத்துக்காட்டுகிறது.
நமது நாட்டில் பண்டிகைகள், குடும்பத்தினர் மற்றும் சமுதாயத்தினருடன் இணைந்து கொண்டாடும் நிகழ்வாக உள்ளன. ஆனால், தற்போதைய கொவிட்-19 தொற்று காரணமாக, இந்தாண்டு கொண்டாட்டத்தை அடக்கமாக வைத்துக்கொள்ள வேண்டும். பக்ரீத் பண்டிகையை அதிக முன்னெச்சரிக்கையுடனும், கொவிட் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றியும் ஒவ்வொருவரும் கொண்டாட வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த பக்ரீத் பண்டிகை, நமது வாழ்வில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை கொண்டுவரட்டும்’’
******
(Release ID: 1737259)