பிரதமர் அலுவலகம்

பிரதமர் திரு நரேந்திர மோடி, மாலத்தீவு குடியரசின் அதிபர் மேதகு திரு இப்ராஹிம் முகமது சோலிஹ் இடையே தொலைபேசி உரையாடல்

Posted On: 14 JUL 2021 2:27PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியும் மாலத்தீவு குடியரசின் அதிபர் மேதகு திரு இப்ராஹிம் முகமது சோலிஹ்யும் தொலைபேசி வாயிலாக இன்று உரையாடினார்கள்.

கொவிட் பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவிற்காக அதிபர் திரு சோலிஹ், பிரதமர் திரு மோடிக்கு நன்றி தெரிவித்தார்.

மாலத்தீவில் இந்தியாவின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்களின் நிலை குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்து, கொவிட் தொற்றுக்கு இடையேயும் பணிகள் விரைந்து மேற்கொள்ளப்படுவதற்கு தங்களது திருப்தியை வெளிப்படுத்தினர்.

 ‘அண்டை நாடு முதலில்என்ற இந்தியாவின் கொள்கை மற்றும் அதன் கடல்சார் தொலைநோக்குப் பார்வையான, பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி (சாகர்) என்பதன் மையத்தூணாக மாலத்தீவு விளங்குவதாக பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவராக மாலத்தீவுகளின் வெளியுறவு அமைச்சர் திரு அப்துல்லா ஷாஹித் தேர்வு செய்யப்பட்டதற்கு அதிபர் திரு சோலிஹ்க்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

இரண்டு தலைவர்களுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடல், இருநாட்டு உறவுகளின் தற்போதைய நிலைப்பற்றி அறிந்து கொள்ளவும், இருநாடுகளின் ஒத்துழைப்பிற்கு மேலும் உத்வேகம் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கவும் ஓர் வாய்ப்பாக அமைந்தது.

****




(Release ID: 1735355) Visitor Counter : 224