சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 அண்மைத் தகவல்கள்
இடுகை இடப்பட்ட நாள்:
14 JUL 2021 10:16AM by PIB Chennai
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 38.76 கோடி கொவிட் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
நாடு முழுவதும், இதுவரை 3,01,04,720 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.28 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 41,000 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில், 38,792 புதிய பாதிப்புகள் இந்தியாவில் பதிவாகி உள்ளன.
தற்போது இந்தியாவில் கொரோனா தொற்றுக்காக 4,29,946 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கையில் 1.39% ஆகும்.
வாராந்திர தொற்று உறுதி விகிதம் 5 சதவீதத்திற்கும் குறைவாக சரிந்து 2.25%ஆக உள்ளது.
தினசரி தொற்று விகிதம் தொடர்ந்து 23 நாட்களாக 3 சதவீதத்திற்கும் குறைவாக 2.10% ஆக பதிவாகி உள்ளது.
இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 43.59 கோடி ஆகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1735272
*****
(Release ID: 1735272)
(வெளியீட்டு அடையாள எண்: 1735287)
வருகையாளர் எண்ணிக்கை : 277