மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
கொவிட்-19 விதிமுறைகளை கடுமையாக பின்பற்றி 2021 செப்டம்பர் 12 அன்று நீட் (இளநிலை) தேர்வு நடைபெறும்
प्रविष्टि तिथि:
12 JUL 2021 6:54PM by PIB Chennai
நீட் (இளநிலை) தேர்வு 2021, 12 செப்டம்பர் 2021 அன்று கொவிட்-19 விதிமுறைகளை பின்பற்றி நாடு முழுவதும் நடைபெறும் என்று மத்திய கல்வி மற்றும் திறன் வளர்த்தல் & தொழில் முனைதல் அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று அறிவித்தார்.
இது குறித்து தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் செயல்முறை நாளை மாலை 5 மணிக்கு தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் தொடங்கும் என்று தெரிவித்தார்.
“சமுக இடைவெளி விதிகளை உறுதி செய்வதற்காக, தேர்வு நடைபெறும் நகரங்களின் எண்ணிக்கை 155-ல் இருந்து 198 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் 2020-ல் இருந்த 3862-ல் இருந்து அதிகரிக்கப்படும்,” என்று அமைச்சர் கூறினார்.
“கொவிட்-19 விதிமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக, அனைத்து தேர்வர்களுக்கும் மையங்களில் முகக்கவசங்கள் வழங்கப்படும். உள்ளே வர மற்றும் வெளியே செல்ல தனித்தனி நேரங்கள், தொடர்பில்லா பதிவுமுறை, முறையான கிருமி நாசினி நடவடிக்கைகள், சமூக இடைவெளியுடன் கூடிய அமரும் வசதிகள் உள்ளிட்டவையும் உறுதி செய்யப்படும்,” என்று திரு பிரதான் மேலும் தெரிவித்தார்.
-----
(रिलीज़ आईडी: 1734889)
आगंतुक पटल : 359