சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான இணை அமைச்சராக திரு அஸ்வினி குமார் சௌபே பொறுப்பேற்பு

Posted On: 12 JUL 2021 1:12PM by PIB Chennai

மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான இணை அமைச்சராக திரு அஸ்வினி குமார் சௌபே புதுதில்லியில் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அமைச்சகத்தின் செயலாளர் திரு ஆர் பி குப்தா மற்றும் மூத்த அதிகாரிகள் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பொறுப்பேற்றுக் கொள்வதற்கு முன்பு, சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வளாகத்தில் திரு சௌபே மரக்கன்று ஒன்றை நட்டார்.

பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தமக்கு இந்தப் பொறுப்பை வழங்கியதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்‌. கடந்த ஏழு ஆண்டுகளில் முன்பு எப்போதும் இல்லாத வகையிலான பணிகளை சுற்றுச்சூழல் அமைச்சகம் திறம்பட மேற்கொண்டிருப்பதாகவும், வனப்பகுதிகளின் நிலத்தை மேலும் அதிகரிப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1734756

*****

(Release ID: 1734756)


(Release ID: 1734770) Visitor Counter : 261