நிலக்கரி அமைச்சகம்
நிலக்கரி விற்பனை: சுரங்கங்களின் ஏலத்திற்கான தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளிகள் திறப்பு: 19 சுரங்கங்களுக்கு 34 ஒப்பந்தப்புள்ளிகள் வரப்பெற்றன
Posted On:
09 JUL 2021 4:03PM by PIB Chennai
நிலக்கரி விற்பனைக்காக 67 நிலக்கரி சுரங்கங்களின் ஏல நடைமுறை மத்திய நிலக்கரி அமைச்சகத்தால் நியமிக்கப்பட்ட முகமையால் 2021 மார்ச் 25 அன்று தொடங்கப்பட்டது. தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளிகள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 2021 ஜூலை 8 ஆகும்.
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையின் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகள் 2021 ஜனவரி 9 காலை 10 மணியில் இருந்து புதுதில்லியில் ஏலதாரர்களின் முன்னிலையில் திறக்கப்பட்டன.
முதலில் ஆன்லைன் மூலம் சமர்பிக்கப்பட்ட விண்ணப்பங்களும், பின்னர் ஆஃப்லைன் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட கோப்புகளும் திறக்கப்பட்டன. மொத்த நடைமுறையும் ஏலதாரர்களுக்காக திரையில் காண்பிக்கப்பட்டது.
19 சுரங்கங்களுக்கு 34 ஒப்பந்தப்புள்ளிகள் சமர்பிக்கப்பட்டிருந்தன. மொத்தம் 20 நிறுவனங்கள் தங்களது ஒப்பந்தப்புள்ளிகளை சமர்பித்திருந்தன. தகுதியுடைய ஏலதாரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்எஸ்டிசி இணையதளத்தில் நடைபெறவிருக்கும் மின்னணு ஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1734233
*****************
(Release ID: 1734329)
Visitor Counter : 225