சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கடந்த 24 மணி நேரத்தில் செலுத்தப்பட்ட கொவிட் தடுப்பூசிகள் : 40 லட்சத்திற்கும் அதிகம்
Posted On:
09 JUL 2021 11:35AM by PIB Chennai
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 40 லட்சத்திற்கும் கூடுதலான தடுப்பூசிகள் (40,23,173) செலுத்தப்பட்டுள்ளன.
நாட்டில் செலுத்தப்பட்டுள்ள கொவிட் தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 36.89 கோடியைக் கடந்தது. இன்று காலை 7 மணிக்குக் கிடைத்த முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 36,89,91,222 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு, மொத்தம் 11.18 கோடிக்கும் அதிகமான (11,18,32,803) தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
தடுப்பூசி இயக்கத்தின் 174-வது நாளன்று (08.07.2021) போடப்பட்ட 40,23,173 தடுப்பூசிகளில், 27,01,200 பேருக்கு முதல் டோஸூம், 13,21,973 பேருக்கு இரண்டாவது டோஸூம் செலுத்தப்பட்டன.
தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், பிகார், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய எட்டு மாநிலங்களில், 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு 50 லட்சத்திற்கும் அதிகமான கொவிட்-19 தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 18-44 வயதுக்குட்பட்டவர்களைப் பொறுத்தவரை, 61,53,031 பேருக்கு முதல் டோஸூம், 1,85,262 பேருக்கு இரண்டாவது டோஸூம் கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1734121
*****
(Release ID: 1734173)
Visitor Counter : 183