மத்திய அமைச்சரவை

ஐசிஓஏஐ, ஏசிசிஏ ஆகியவற்றுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 08 JUL 2021 7:30PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (2021 ஜூலை 8) கூடிய மத்திய அமைச்சரவை கீழ்காணும் முடிவுகளை எடுத்தது.

ரூ 23,123 கோடி செலவிலானஇந்திய கொவிட்-19 அவசரகால எதிர்வினை மற்றும் சுகாதார அமைப்புகள் தயார்நிலை தொகுப்பு: பகுதி II”-க்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நோய்களை விரைந்து தடுத்தல், கண்டறிதல் மற்றும் மேலாண்மை ஆகியவற்றில் உடனடி செயல்பாடுகளுக்காக சுகாதார அமைப்பின் தயார்நிலையை மேம்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது. குழந்தைகள் நலம் உள்ளிட்ட சுகாதார உள்கட்டமைப்பின் மேம்பாடு மற்றும் அளவிடக்கூடிய வெளிப்பாடுகள் மீது இது கவனம் செலுத்தும்.

மத்தியத் துறை மற்றும் மத்திய அரசு நிதியுதவி பெற்ற திட்டங்கள் எனும் இரண்டு கூறுகள் இத்தொகுப்பின் இரண்டாம் கட்டத்தில் உள்ளன

 

போட்டி சட்டம் மற்றும் கொள்கை ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதத்தில், இந்திய போட்டியியல் ஆணையம் மற்றும் ஜப்பான் நியாய வர்த்தக ஆணையத்திற்கிடையேயான ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஜப்பானில் உள்ள போட்டியியல் முகமையிடம் இருந்து அனுபவங்களை இந்திய போட்டியியல் ஆணையம் கற்றுக்கொண்டு செயல்படுத்த முடியும். இந்திய போட்டியியல் ஆணையத்தின் போட்டியியல் சட்டம், 2022- சிறப்பாக செயல்படுத்த இது உதவும். இதன் மூலம் நுகர்வோர்களுக்கு பலன் கிடைப்பதோடு, சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவை ஊக்கம் பெறும்.

இந்திய செலவு கணக்காளர்கள் அமைப்பு (ஐசிஓஏஐ), மற்றும் சான்றளிக்கப்பட்ட பட்டய கணக்கர்கள் சங்கம் (ஏசிசிஏ), இங்கிலாந்து, ஆகியவற்றுக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம், இந்த இரண்டின் ஒரு நிறுவனத்தின் உறுப்பினர்கள் மற்றொரு அமைப்பின் தகுதியை பெறுவதற்காக எழுத வேண்டிய தேர்வுகளில் இருந்து விலக்களிக்கப்படும். மேலும், அறிவுசார்ந்த விஷயங்கள், ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகளை இரு நிறுவனங்களும் பகிர்ந்து கொண்டு, இரு நாடுகளில் நல்லாளுகை செயல்முறையை பலப்படுத்துவார்கள்.

வேளாண் உள்கட்டமைப்பு நிதி’-யின் கீழ் நிதி வசதி வழங்கும் மத்தியத் துறை திட்டத்தில் மாற்றங்களுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம், மாநில முகமைகள்/வேளாண் பொருட்கள் சந்தைப்படுத்துதல் குழுக்கள், தேசிய மற்றும் மாநில கூட்டுறவு கூட்டமைப்புகள், விவசாயிகள் உற்பத்தியாளர்கள் அமைப்புகளின் கூட்டமைப்புகள் மற்றும் சுய உதவி குழுக்களின் கூட்டமைப்புகளுக்கு தகுதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் அடிப்படை நோக்கம் மாறாத வகையில் பயனாளியை சேர்க்கவோ, நீக்கவோ வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் அமைச்சருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

தேங்காய் வளர்ச்சி வாரியத்தின் தலைவர் பதவியை அதிகாரவர்க்கம் சாரா தலைவர் பதவியாக மாற்றுவதற்கு தேவையான திருத்தத்தை தேங்காய் வளர்ச்சி வாரிய சட்டம், 1979-ல் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் தேங்காய் விவசாயிகள் பயனடைவார்கள்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1733832

 

-----



(Release ID: 1733975) Visitor Counter : 237