எஃகுத்துறை அமைச்சகம்
எஃகுத் துறை அமைச்சராக திரு ராம்சந்திர பிரசாத் சிங் பொறுப்பேற்பு
Posted On:
08 JUL 2021 2:53PM by PIB Chennai
எஃகுத் துறை அமைச்சராக திரு ராம்சந்திர பிரசாத் சிங் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். அவரை எஃகுத்துறை இணையமைச்சர் திரு ஃபகன் சிங் குலாஸ்தே வரவேற்றார்.
பதவியேற்ற பின் எஃகுத் துறை அமைச்சர் திரு ராம்சந்திர பிரசாத் சிங் அளித்த பேட்டியில், 2024ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடைய பிரதமர் திரு. நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்துள்ளதால், எஃகுத் துறை முக்கிய பங்காற்றவுள்ளது என கூறினார். எஃகுத் துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.
திரு ராம்சந்திர பிரசாத் சிங், பீகார் மாநிலங்களவை எம்.பி. இவர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி.
------
(Release ID: 1733821)
Visitor Counter : 185