சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக திரு கிரண் ரிஜிஜூ பதவி ஏற்பு

Posted On: 08 JUL 2021 1:01PM by PIB Chennai

சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக திரு கிரண் ரிஜிஜூ இன்றுபொறுப்பேற்றுக் கொண்டார். அதன்பின் பேட்டியளித்த அவர், ‘‘ சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சராக எனக்கு மிகப் பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது எனது முன்னுரிமையாக இருக்கும் மற்றும் வெளிப்படைத்தன்மையை பாதுகாக்க நான் எப்போதும் முயற்சிப்பேன்.

சட்ட மற்றும் நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்கும் முன்பு, திரு கிரண் ரிஜிஜூ இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக 2019 மே முதல் 2021 ஜூலை வரை பணியாற்றினார் மற்றும் சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சராக 2014 மே முதல் 2019 மே வரை பணியாற்றினர்.

தீவிர அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த திரு கிரண் ரிஜிஜூ, பொது விவகாரங்களில் மாணவர் பருவத்தில் இருந்தே ஆர்வம் காட்டினார். தனது 31வது வயதிலேயே காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். கடந்த 2004ம் ஆண்டு, மேற்கு அருணாச்சலப் பிரதேச தொகுதியிலிருந்து  14வது மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தில் இவரது வருகைப்பதிவு 90 சதவீதத்துக்கும் மேல் உள்ளது. தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பல கேள்விகளை இவர் நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளார்.

முக்கிய விவாதங்களில் பங்கேற்றுள்ளார்.

சிறந்த இளம் நாடாளுமன்றவாதியாகவும் இவர் திகழ்ந்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1733610

******


(Release ID: 1733702)