குடியரசுத் தலைவர் செயலகம்

மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் வெளியீடு

Posted On: 07 JUL 2021 10:21PM by PIB Chennai

பிரதமரின் ஆலோசனைப்படி, அமைச்சர்கள் குழுவின் பின்வரும் உறுப்பினர்களிடையே இலாகாக்களை ஒதுக்க குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்:-

திரு நரேந்திர மோடி- பிரதமர் மற்றும் பொறுப்பேற்க உள்ள இலாகாக்கள்:
பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள்;
அணுசக்தித் துறை;
விண்வெளித்துறை;
அனைத்து முக்கிய கொள்கை விஷயங்கள் மற்றும்
எந்த அமைச்சருக்கும் ஒதுக்கப்படாத இதர இலாக்காக்கள்

மத்திய அமைச்சர்கள்:-
1.    திரு ராஜ்நாத் சிங்- பாதுகாப்பு அமைச்சர்
2.    திரு அமித் ஷா- உள்துறை அமைச்சர் மற்றும் கூட்டுறவு அமைச்சர்
3.    திரு நிதின் ஜெயராம் கட்காரி- சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்
4.    திருமதி நிர்மலா சீதாராமன்- நிதியமைச்சர் மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர்
5.    திரு நரேந்திர சிங் தோமர்- வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர்
6.    டாக்டர் சுப்ரமணியம் ஜெய்சங்கர்- வெளியுறவு அமைச்சர்
7.    திரு அர்ஜுன் முண்டா- பழங்குடி விவகாரங்கள் அமைச்சர்
8.    திருமதி ஸ்மிருதி சுபின் இரானி- மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர்
9.    திரு பியூஷ் கோயல்- வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் மற்றும் ஜவுளி அமைச்சர்
10.    திரு தர்மேந்திர பிரதான்- கல்வி அமைச்சர் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சர்
11.    திரு பிரல்ஹாத் ஜோஷி- நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர், நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் அமைச்சர்
12.    திரு நாராயண் டட்டு ரானே- குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர்
13.    திரு சர்பானந்தா சோனோவால்- துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் மற்றும் ஆயுஷ் அமைச்சர்
14.    திரு முக்தார் அப்பாஸ் நக்வி- சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சர்
15.    டாக்டர் வீரேந்திர குமார்- சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர்
16.    திரு கிரிராஜ் சிங்- ஊரக மேம்பாட்டு அமைச்சர் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர்
17.    திரு ஜோதிராதித்யா எம். சிந்தியா- சிவில் விமான போக்குவரத்து அமைச்சர்
18.    திரு ராமச்சந்திர பிரசாத் சிங்- எஃகு அமைச்சர்
19.    திரு அஷ்வினி வைஷ்ணவ்- ரயில்வே அமைச்சர், தொலைத்தொடர்பு அமைச்சர் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்
20.    திரு பசுபதி குமார் பராஸ்- உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர்
21.    திரு கஜேந்திர சிங் ஷெகாவத்- ஜல் சக்தி அமைச்சர்
22.    திரு. கிரண் ரிஜிஜு- சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர்
23.    திரு ராஜ் குமார் சிங்- எரிசக்தி அமைச்சர் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர்
24.    திரு ஹர்தீப் சிங் புரி- பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர், வீடு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர்
25.    திரு மன்சுக் மாண்டவியா- சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வு அமைச்சர், ரசாயணம் மற்றும் உரங்கள் அமைச்சர்
26.    திரு புபேந்தர் யாதவ்- சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்
27.    டாக்டர் மகேந்திர நாத் பாண்டே- கனரக தொழில்துறை அமைச்சர்
28.    திரு பர்ஷோத்தம் ருபாலா- மீன்வளம், கால்நடை மற்றும் பால் வள அமைச்சர்
29.    திரு ஜி கிஷண் ரெட்டி- கலாச்சார அமைச்சர், சுற்றுலா அமைச்சர், வடகிழக்கு மாகாண வளர்ச்சி அமைச்சர்
30.    திரு அனுராக் சிங் தாகூர்- தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர்

இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு):-
1.    திரு ராவ் இந்தர்ஜித் சிங்- புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க இணை அமைச்சர் (தனி பொறுப்பு); திட்டங்கள் இணை அமைச்சர் (தனி பொறுப்பு); பெருநிறுவன விவகாரங்கள் இணை அமைச்சர்
2.    டாக்டர் ஜிதேந்திர சிங்- அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை அமைச்சர் (தனி பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சர் (தனி பொறுப்பு); பிரதமர் அலுவலக இணை அமைச்சர்; பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் இணை அமைச்சர்; அணுசக்தித் துறை இணை அமைச்சர்; விண்வெளித்துறை இணை அமைச்சர்

இணை அமைச்சர்கள்:-
1.    திரு ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக்- துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர்வழிகள் இணை அமைச்சர்; சுற்றுலா இணை அமைச்சர்
2.    திரு ஃபக்கன்சிங் குலஸ்தே- எஃகு இணை அமைச்சர்; ஊரக மேம்பாட்டு இணை அமைச்சர்
3.    திரு பிரகலாத் சிங் பட்டேல்- ஜல் சக்தி இணை அமைச்சர்; உணவு பதப்படுத்துதல் தொழில்துறை இணை அமைச்சர்
4.    திரு அஸ்வினி குமார் சௌபே- நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக இணை அமைச்சர்; சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான இணை அமைச்சர்
5.    திரு அர்ஜுன் ராம் மேக்வால்- நாடாளுமன்ற விவகாரங்கள் இணை அமைச்சர்; கலாச்சார இணை அமைச்சர்
6.    ஜெனரல் (ஓய்வு) வி கே சிங்- சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் இணை அமைச்சர்; சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர்
7.    திரு கிருஷண் பால்- எரிசக்தி இணை அமைச்சர்; கனரக தொழில்துறை இணை அமைச்சர்
8.    திரு தன்வே ராவ்சாஹேப் தாதாராவ்- ரயில்வே இணை அமைச்சர்; நிலக்கரி இணை அமைச்சர்; சுரங்கங்கள் இணை அமைச்சர்
9.    திரு ராம்தாஸ் அத்வாலே- சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர்
10.    சாத்வி நிரஞ்சன் ஜோதி- நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக இணை அமைச்சர்; ஊரக மேம்பாட்டு இணை அமைச்சர்
11.    டாக்டர் சஞ்சீவ் குமார் பல்யான்- மீன்வளம், கால்நடை மற்றும் பால்வள இணை அமைச்சர்
12.    திரு நித்யானந்த் ராய்- உள்துறை இணை அமைச்சர்
13.    திரு பங்கஜ் சவுத்ரி- நிதி இணை அமைச்சர்
14.    திருமதி அனுப்பிரியா சிங் பட்டேல்- வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர்
15.    பேராசிரியர் எஸ் பி சிங் பாகேல்- சட்டம் மற்றும் நீதி இணை அமைச்சர்
16.    திரு ராஜீவ் சந்திரசேகர்- திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு இணை அமைச்சர்; மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர்
17.    திருமிகு ஷோபா கரண்ட்லஜே- வேளாண் மற்றும் விவசாயிகள் நல இணை அமைச்சர்
18.    திரு பானு பிரதாப்சிங் வர்மா- குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இணை அமைச்சர்
19.    திருமதி தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ்- ஜவுளி இணை அமைச்சர்; ரயில்வே இணை அமைச்சர்
20.    திரு வி முரளிதரன்-வெளியுறவு இணை அமைச்சர்; நாடாளுமன்ற விவகாரங்கள் இணை அமைச்சர்
21.    திருமதி மீனாட்சி லேகி- வெளியுறவு விவகாரங்கள் இணை அமைச்சர்; கலாச்சார இணை அமைச்சர்
22.    திருச் சோம் பர்காஷ்- வர்த்தக மற்றும் தொழில்துறை இணை அமைச்சர்
23.    திருமதி ரேணுகா சிங்- பழங்குடியினர் விவகாரங்கள் இணை அமைச்சர்
24.    திரு ரமேஷ்வர் தெளி- பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணை அமைச்சர்; தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர்
25.    திரு கைலாஷ் சவுத்ரி- வேளாண் மற்றும் விவசாயிகள் நல இணை அமைச்சர்
26.    திருமதி அன்னபூர்ணா தேவி- கல்வி இணை அமைச்சர்
27.    திரு ஏ. நாராயணசுவாமி- சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர்
28.    திரு கவுஷல் கிஷோர்- வீடு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணை அமைச்சர்
29.    திரு அஜய் பட்- பாதுகாப்பு இணை அமைச்சர்; சுற்றுலா இணை அமைச்சர்
30.    திரு பி எல் வர்மா- வடகிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சர்; கூட்டுறவு இணை அமைச்சர்
31.    திரு அஜய் குமார்- உள்துறை இணை அமைச்சர்
32.    திரு தேவுசிங் சவுகான்- தொலைத்தொடர்பு இணை அமைச்சர்
33.    திரு பக்வந்த் குபா- புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இணை அமைச்சர்; ரசாயனம் மற்றும் உரங்கள் இணை அமைச்சர்
34.    திரு.கப்பில் மோரேஷ்வர் பாட்டில்- பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர்
35.    திருமிகு பிரதிமா பௌமிக்- சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர்
36.    டாக்டர் சுபாஷ் சர்கார்- கல்வி இணை அமைச்சர்
37.    டாக்டர் பகவத் கிஷன்ராவ் கராத்- நிதி இணை அமைச்சர்
38.    டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்- வெளியுறவு இணை அமைச்சர்; கல்வி இணை அமைச்சர்
39.    டாக்டர் பாரதி பிரவீன் பவார்- சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர்
40.    திரு பிஷ்வேஸ்வர் துது- பழங்குடியினர் விவகாரங்கள் இணை அமைச்சர்; ஜல்சக்தி இணை அமைச்சர்
41.    திரு சாந்தனு தாகூர்- துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் இணை அமைச்சர்
42.    டாக்டர் முஞ்சபாரா மகேந்திரபாய்- பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு இணை அமைச்சர்; ஆயுஷ் இணை அமைச்சர்
43.    திரு ஜான் பர்லா- சிறுபான்மையினர் விவகாரங்கள் இணை அமைச்சர்
44.    டாக்டர் எல் முருகன்- மீன்வளம் கால்நடை மற்றும் பால்வள இணை அமைச்சர்; தகவல் மற்றும் ஒலிபரப்பு இணை அமைச்சர்
45.    திரு நிஸித் பிரமனிக்- உள்துறை இணை அமைச்சர்; இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு இணை  அமைச்சர்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1733526 

(Release ID: 1733526)


(Release ID: 1733669) Visitor Counter : 1898