வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

வர்த்தகம் மற்றும் வளர்ச்சியை வலுப்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக பங்கெடுக்க வேண்டும் : இந்தோ-பசிபிக் பகுதி தொழிலதிபர்களுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அழைப்பு

Posted On: 07 JUL 2021 4:39PM by PIB Chennai

இந்தோ-பசிபிக் பகுதியில் வர்த்தகம் மற்றும் வளர்ச்சியை வலுப்படுத்தும் முயற்சிகளில் தீவிரமாக பங்கெடுக்க வேண்டும் என இந்தோ-பசிபிக் தொழிலதிபர்களுக்கு மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் இன்று அழைப்பு விடுத்தார்.

‘‘பகிரப்பட்ட வளங்களுக்கான திட்டத்தை உருவாக்குதல்’’ என்ற தலைப்பில், இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஏற்பாடு செய்த இந்தோ-பசிபிக் பகுதி வர்த்தக அமைச்சர்களுடனான சிறப்பு கூட்டத்தில் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் பேசியதாவது:

இந்தியாவின் சாதனை பதிவுகள்நமது நண்பர்களுக்கு நம்பிக்கையை அளிக்க வேண்டும். வரும் ஆண்டுகளில் இந்தியா மிகவும் நம்பத்தகுந்த நாடாக இருக்கும். உலக அரங்கின்  புதிய பொருளாதார மையமாக இந்தோ-பசிபிக் பகுதி உள்ளது. பிரதமர் திரு. நரேந்திர மோடி கடந்த 2015ம் ஆண்டு, இந்தோ-பசிபிக் பகுதிக்குசாகர்என்ற தொலைநோக்கு திட்டத்தை தெரிவித்தார்.

இப்பகுதியில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி திட்டம்தான் அது. இப்பகுதியில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் இத்திட்டம், சம அளவிலான அமைதி மற்றும் அனைவருக்கும் செழிப்பை அளிக்கக்கூடிய வகையில்  வழிகாட்டும் கொள்கையாக இருக்க வேண்டும்.

ஒரு வெளிப்படையான, நம்பிக்கையான, பிறரை சார்ந்த நுகர்வு சங்கிலியை உறுதிசெய்வதை நோக்கிய கருத்தை இந்தியா ஆமோதிக்கிறது.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நுகர்வு சங்கிலியின் மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. நுகர்வு சங்கிலி மீட்பை உருவாக்குவதில் இது உறுதியான நடவடிக்கை. இதில் இதர நட்பு நாடுகளையும் இணைக்கலாம்.

இவ்வாறு மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறினார்.

கொரியா, கென்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிஜி, இலங்கை ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த கூட்டத்தில் உரையாற்றினர்.

----



(Release ID: 1733447) Visitor Counter : 207