பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

விடுதலையின் அம்ரித் மகோத்சவம் பற்றி, 225 முன்னணி பஞ்சாயத்துகளுக்கு நெறிப்படுத்தும் பயிற்சி திட்டம் : பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் நடத்தியது

Posted On: 07 JUL 2021 2:50PM by PIB Chennai

இந்திய விடுதலையின் 75வது ஆண்டு, அம்ரித் மகோத்சவம் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இதற்காக அடையாளம் காணப்பட்ட 225 முன்னணி பஞ்சாயத்து அமைப்புகளுக்கு நெறிப்படுத்தும் பயிற்சி திட்டம், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர் சந்திர சேகர் குமார் தலைமை தாங்கினார். பொருளாதார ஆலோசகர்  டாக்டர் விஜய குமார் பெஹரா நிகழ்ச்சியை நடத்தினார். பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் இணை செயலாளர்கள், மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களின் பஞ்சாயத்து ராஜ் துறைகள், ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் தேசிய மையம் மற்றும் மாநில மையங்களின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.

துவக்கவுரை ஆற்றிய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் டாக்டர் சந்திர சேகர் குமார், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை வரவேற்றார் மற்றும் இந்திய ஊரக பகுதிகளில் அம்ரித் மகோத்சவத்தை உற்சாகமாக கொண்டாடுவதில் முன்னணி பஞ்சாயத்துகள் ஆற்ற வேண்டிய முக்கிய பங்கை வலியுறுத்தினார்.

இந்த நெறிப்படுத்தும் பயிற்சி திட்டத்தில், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் எதிர்கால பங்கு குறித்து, ஐதராபாத்தில் உள்ள பஞ்சாயத்து ராஜ் மையத்தின் இணை பேராசிரியர் டாக்டர் அஞ்சன் குமார் பான்ஜா விளக்கினார். மத்தியப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் கேரளா உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அம்ரித் மகோத்சவம் தொடங்கப்பட்ட கடந்த மார்ச் 12ம் தேதியிலிருந்துஇதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை எடுத்து கூறினர். இவர்களின் முயற்சிகளை பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் பாராட்டினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1733345

*****

(Release ID: 1733345)


(Release ID: 1733361)