சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

நாட்டில் போடப்பட்ட கொவிட்-19 தடுப்பூசிகளின் எண்ணிக்கை 35.75 கோடியைக் கடந்தது

Posted On: 06 JUL 2021 1:08PM by PIB Chennai

நாட்டில் போடப்பட்ட கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை இன்று காலை 7 மணி நிலவரப்படி 35.75 கோடியைக் (35,75,53,612)  கடந்தது. 18-44 வயது பிரிவினருக்கு 10.57 கோடிக்கு (10,57,68,530) மேற்பட்ட தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டன.

கடந்த 24 மணி நேரத்தில் 45 லட்சம் (45,82,246) டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டன

தடுப்பூசி நடவடிக்கையின் 171வது நாளான நேற்று, 45,82,246 தடுப்பூசிகள் வழங்கப்பட்டதில்,  27,88,440 பயனாளிகளுக்கு முதல் டோஸ் தடுப்பூசியும், 17,93,806 பயனாளிகளுக்கு 2வது டோஸ் தடுப்பூசியும் வழங்கப்பட்டது.

18 முதல் 44 வயது பிரிவினருக்கு நேற்று, 20,74,636 தடுப்பூசிகள் முதல் டோஸாகவும், 1,48,709 தடுப்பூசிகள் 2வது டோஸாகவும் போடப்பட்டன

இந்த வயது பிரிவினரில், 37 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த  மொத்தம் 10,28,40,418 பேர் முதல் டோஸ் தடுப்பூசிகளையும், 29,28,112 பேர், 2வது டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.

கொவிட் -19 தொற்றிலிருந்து நாட்டு மக்களை காக்கும் உபகரணமாக தடுப்பூசி நடவடிக்கை உள்ளதால், அது தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு, மிக உயர்ந்த அளவில் கண்காணிக்கப்பட்டு வருகிறது

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1733049

******

(Release ID: 1733049)

 



(Release ID: 1733087) Visitor Counter : 227