பிரதமர் அலுவலகம்
மறைந்த திரு ராம் விலாஸ் பாஸ்வானின் பிறந்தநாளை முன்னிட்டு அன்னாரை நினைவு கூர்ந்துள்ளார் பிரதமர்.
இடுகை இடப்பட்ட நாள்:
05 JUL 2021 9:53AM by PIB Chennai
மறைந்த திரு ராம் விலாஸ் பாஸ்வான் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்துள்ளதுடன், இந்தியாவின் மிகுந்த அனுபவமிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுள் அவரும் ஒருவர் என்று கூறியுள்ளார்.
“இன்று, எனது நண்பரான மறைந்த திரு ராம் விலாஸ் பஸ்வான் அவர்களின் பிறந்தநாள். அவரது பிரிவால் மிகவும் வாடுகிறேன். இந்தியாவின் மிகுந்த அனுபவமிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுள் அவரும் ஒருவர். பொது சேவை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதிகாரமளிப்பதில் அவரது பங்களிப்பு என்றும் நினைவில் கொள்ளப்படும்”, என்று பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
*****************
(வெளியீட்டு அடையாள எண்: 1732794)
வருகையாளர் எண்ணிக்கை : 236
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam