நிதி அமைச்சகம்
கொவிட்-19 பெருந்தொற்றை எதிர்த்து போராட மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் எடுத்துள்ள முயற்சிகளுக்கு நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் பாராட்டு
Posted On:
01 JUL 2021 7:28PM by PIB Chennai
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட நான்காம் ஆண்டு விழாவை ஒட்டி மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் மற்றும் நாடு முழுவதும் உள்ள அதன் அனைத்து அலுவலகங்களிலும் ஜிஎஸ்டி தினம், 2021 கொண்டாடப்பட்டது. காணொலி மூலம் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய அளவிலான நிகழ்ச்சியில் அனைத்து கள பிரிவுகளும் பங்கேற்றன.
ஜிஎஸ்டி தினம், 2021-ஐ ஒட்டி மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ள செய்தியில், புதிய வரி முறைக்கு நிலைத்தன்மை அளிப்பதில் கொவிட் பெருந்தொற்றின் இரு அலைகள் உள்ளிட்ட பல்வேறு சவால்களை நாம் கடந்து வந்துள்ளது பெரும் திருப்தி அளிக்கிறது.
தொடர்ந்து எட்டு மாதங்களாக வரி வசூல் ரூ 1 லட்சம் கோடியை கடந்துள்ளது குறித்தும், 2021 ஏப்ரலில் சாதனை அளவில் ரூ 1.41 லட்சம் ஓடி ஜிஎஸ்டி வரி வசூல் ஆகி உள்ளது குறித்தும் நிதி அமைச்சர் மகிழ்ச்சி தெரிவித்தார்.
ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட நான்காம் ஆண்டு விழாவை ஒட்டி 54,000-க்கும் அதிகமான வரிசெலுத்துவோரை அங்கீகரிக்க மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு திருமதி நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்தார். தாமத கட்டணம் விலக்கு, வட்டி விகிதம் குறைப்பு, கடைசி தேதி நீட்டிப்பு, திரும்ப செலுத்துதல் நடவடிக்கைகள் என இரு கொவிட் நிவாரண தொகுப்புகள் வரிசெலுத்துவோருக்கு வழங்கப்பட்டன.
மேலும், தடுப்பு மருந்து, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் கொவிட் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு தேவைப்படும் பொருட்கள்/சேவைகளுக்கான ஜிஎஸ்டி வரி குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன. காலமான 189 பணியாளர்களுக்கு அமைச்சர் அஞ்சலி செலுத்தி, அஞ்சலி புத்தகத்தையும் வெளியிட்டார். விருது வென்றவர்களை திருமதி நிர்மலா சீதாராமன் பாராட்டினார்.
மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் இணை அமைச்சர் திரு அனுராக் சிங் தாகூர் வெளியிட்டுள்ள செய்தியில் தொழில் துறை, குறிப்பாக சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை பாராட்டினார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1732005
-----
(Release ID: 1732043)
Visitor Counter : 267