சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் டாக்டர் ஹர்ஷ் வர்தன் உரை

Posted On: 30 JUN 2021 4:16PM by PIB Chennai

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின்(எஸ்சிஓ) சுகாதாரத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் டாக்டர் ஹர்ஷ் வர்தன் காணொலி காட்சி மூலம் பேசியதாவது:

எஸ்சிஓ உறுப்பு நாடுகளின் சுகாதார அமைச்சர்களை சந்திப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கொவிட்-19 பொது சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டு 18 மாதங்கள் ஆகிவிட்டன. இது வளர்ந்த நாடுகள் உட்பட ஒட்டு மொத்த உலகத்தையும் உலுக்கிவிட்டது.

அனைவருக்கும் பாதுகாப்பு கிடைக்கும் வரை, யாரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்பதை பெருந்தொற்று காட்டியுள்ளது. சுகாதாரத்தின் பல்வேறு அம்சங்களில், உலக நாடுகள் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும். நமது சுகாதார அமைப்புகளை வலுப்படுத்த நமது அனுபவங்கள், சிறந்த முறைகள் மற்றும் புதுமைகளை நாம் தொடர்ந்து பகிர்ந்து கொள்ள வேண்டும்.

பலநாடுகளைப் போல், உலக சுகாதார அமைப்பில் முக்கிய சீர்திருத்தருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என இந்தியாவும் நம்புகிறது. அப்போதுதான் எதிர்கால பெருந்தொற்றுகள் மீது சரியான நேரத்தில் கவனம் செலுத்துவதை நாம் உறுதி செய்ய முடியும்.

இந்தியாவில் கொவிட் தடுப்பூசிகளை சரியான நேரத்தில் விநியோகிக்க டிஜிட்டல் தொழில்நுட்பம் விரிவாக பயன்படுத்தப்பட்டது.

இவ்வாறு மத்திய அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் பேசினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1731471

*****************



(Release ID: 1731706) Visitor Counter : 229