பிரதமர் அலுவலகம்

‘டிஜிட்டல் இந்தியா’ திட்ட பயனாளிகளுடன் ஜூலை 1 அன்று பிரதமர் உரையாடவுள்ளார்

प्रविष्टि तिथि: 29 JUN 2021 7:06PM by PIB Chennai

டிஜிட்டல் இந்தியாதிட்ட பயனாளிகளுடன் ஜூலை 1 அன்று காலை 11 மணிக்கு காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடவுள்ளார்.

2015-ம் ஆண்டு ஜூலை 1 அன்று பிரதமரால் தொடங்கப்பட்டடிஜிட்டல் இந்தியாஆறு ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

சேவைகளை மேம்படுத்தி, அரசை மக்களுக்கு நெருக்கமாக கொண்டு வந்து, மக்கள் ஈடுபாட்டை ஊக்கப்படுத்தி, மக்களுக்கு அதிகாரமளித்து புதிய இந்தியாவின் மிகப்பெரிய வெற்றி கதைகளில் ஒன்றாகடிஜிட்டல் இந்தியாஉள்ளது.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்பார்.

 

-----

 


(रिलीज़ आईडी: 1731242) आगंतुक पटल : 311
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , Assamese , Telugu , Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Punjabi , Gujarati , Odia