பாதுகாப்பு அமைச்சகம்

புதிய தலைமுறை அக்னி பி ஏவுகணையின் சோதனை வெற்றி

Posted On: 28 JUN 2021 12:21PM by PIB Chennai

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓவின் அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் புதிய தலைமுறை அக்னி பி ஏவுகணை, ஒடிசா மாநிலத்தின் பலாசோர் அருகே உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவிலிருந்து இன்று (ஜூன் 28, 2021) காலை 10:55 மணிக்கு வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

கிழக்குக் கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு தொலை தூரத் தொடர்பு நிலையங்கள் மற்றும் ரேடார் நிலையங்களின் மூலம் ஏவுகணை கண்காணிக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட பாதையில் பயணித்து இந்த ஏவுகணை மிகத்துல்லியமாக இலக்கை அடைந்தது.

அக்னி ரக ஏவுகணைகளில் புதிய தலைமுறை மேம்பட்ட வகையாக அக்னி பி ஏவுகணை விளங்குகிறது. 1000 முதல் 2000 கிலோ மீட்டர் தூரம் வரை பயணிக்கும் திறனை இந்த ஏவுகணை பெற்றுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1730828

*****************(Release ID: 1730868) Visitor Counter : 433