சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

நாட்டில் கொவிட் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 கோடியை கடந்துள்ளது

இடுகை இடப்பட்ட நாள்: 27 JUN 2021 11:27AM by PIB Chennai

குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, நாட்டில் போடப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கை நேற்று 32 கோடியை கடந்ததுஇன்று காலை 7 மணி வரை, 42, 79,210 அமர்வுகள் மூலம், 32,17,60,077 கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளனகடந்த 24 மணி நேரத்தில் 64,25,893 கொவிட் தடுப்பூசிகள் போடப்பட்டன.

புதிய கொவிட்-19 தடுப்பூசி திட்டம் 2021 ஜூன் 21ம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் கொவிட் தடுப்பூசி போடப்படும் வேகத்தை அதிகரிக்கவும், அளவை விரிவுபடுத்தவும் மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 50,040 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து 20 நாட்களாக, தினசரி கொவிட் பாதிப்பு 1 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.  விட் பாதிப்பு, தொடர்ந்து குறைந்து வருகிறது. நாட்டில் தற்போது கொவிட் சிகிச்சை பெறுவர்களின் எண்ணிக்கை 5,86,403 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையில் 9,162 பேர் குறைந்துள்ளனர்.

தற்போது கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம் மொத்த பாதிப்பில் 1.94 சதவீதம்

தொடர்ந்து 45 நாட்களாக, நாட்டில் தினசரி குணமடைபவர்களின் எண்ணிக்கை, தினசரி கொவிட் பாதிப்பை விட அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 57,944 பேர் குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில், தினசரி கொவிட் பாதிப்புடன் ஒப்பிடுகையில் சுமார் 8 ஆயிரம் பேர் (7,904) குணமடைந்துள்ளனர்.

நாட்டில் இதுவரை 2,92,51,029 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 57,944  பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் மொத்த சதவீதம் 96.75 சதவீதம்.

நாடு முழுவதும், கொவிட் பரிசோதனை, கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 17,77,309 பேர் குணமடைந்துள்ளனர்நாட்டில், இதுவரை மொத்தம் 40.42 கோடி (40,42,65,101) பரிசோதனைகள் செய்யப்பட்டன.

நாடு முழுவதும் கொவிட் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், வாராந்திர கொவிட் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. வாராந்திர கொவிட் பாதிப்பு, தற்போது, 2.91 சதவீதமாக உள்ளது. தினசரி கொவிட் பாதிப்பு இன்று  2.82 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து 20 நாட்களாக தினசரி கொவிட் பாதிப்பு  5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1730643

                                                                                             ----


(வெளியீட்டு அடையாள எண்: 1730684) வருகையாளர் எண்ணிக்கை : 286
இந்த வெளியீட்டை படிக்க: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Punjabi , Odia , Kannada , Malayalam