நித்தி ஆயோக்

தாய்மார்கள், இளம்பருவத்தினர் மற்றும் குழந்தைகளின் உடல் பருமனை தடுப்பதற்கான தேசிய மாநாடு : நிதி ஆயோக் கூட்டியது

Posted On: 25 JUN 2021 12:32PM by PIB Chennai

தாய்மார்கள், இளம்பருவத்தினர் மற்றும் குழந்தைகளின் உடல் பருமனை தடுப்பதற்கான தேசிய மாநாட்டை  நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால்இந்திய ஊட்டசத்து மைய இயக்குனர் டாக்டர் ஆர்.ஹேமலதா தலைமையில் நிதி ஆயோக் கூட்டியது.  

இதில் பேசிய நிதி ஆயோக் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து பிரிவு கூடுதல் செயலாளர் டாக்டர் ராகேஷ் சர்வால், ‘‘உடல் பருமன் அமைதியான தொற்று நோய்’’ என கூறினார்.  இந்த தேசிய ஆலோசனை கூட்டத்தில், சர்வதேச நிபுணர்கள், ஐ.நா அமைப்புகளின் பிரதிநிதிகள், மத்திய அமைச்சர்கள், தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் உடல் பருமன் அதிகரிப்பது தொடர்பான ஆதாரங்கள், உடல் பருமனை குறைப்பதற்கான வழிமுறைகள் ஆகியவற்றை தெரிவித்தனர்.

இந்தியாவில் அதிக ஊட்டச்சத்து காரணமாக உடல் பருமன் பிரச்சினை அதிகரித்ததற்கான ஆதாரங்களை யுனிசெப் தலைமை ஊட்டச்சத்து நிபுணர் அர்ஜென் டி வாக்ட் முன்வைத்தார்.  இந்தியாவின் சில பகுதிகளில், உடல் பருமன் பிரச்சினை தற்போது அதிகரித்து வருவது பற்றிய தரவுகளை ஐஇஜி பேராசிரியர் வில்லியம் ஜோ பகிர்ந்து கொண்டார்.

இறுதியில், செயல்பாடு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்காக இளம் பருவத்தினரை இலக்காகக் கொண்ட பல துறை அணுகுமுறை தேவை என நிதி ஆயோக் உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1730258

*****************



(Release ID: 1730285) Visitor Counter : 209