பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்

சர்வதேச யோகா தினம் 2021-ன் போது நடைபெற்ற நிகழ்ச்சிகளில் 42,28,802 குழந்தைகள், 22,72,197 வளரிளம் பருவத்தினர், 17,37,440 கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் பங்கேற்றனர்

Posted On: 23 JUN 2021 5:25PM by PIB Chennai

சர்வதேச யோகா தினம் 2021-ன் போது நடைபெற்ற நிகழ்ச்சிகளில் 42,28,802 குழந்தைகள், 22,72,197 வளரிளம் பருவத்தினர், 17,37,440 கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை பேணுவதற்காக பங்கேற்றனர்.

மொத்தம் 32 லட்சத்திற்கும் அதிகமான கள பணியாளர்கள் மற்றும் 82 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகள் யோகா நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

22 லட்சத்திற்கும் அதிகமானோர் யோகா காணொலிகளை பதிவிறக்கம் செய்தனர். 24.64 லட்சம் பேர் யோகா காணொலிகளை பகிர்ந்தனர் மற்றும் 29.18 லட்சம் பேர் தங்களது மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் யோகா  நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

யோகா தினத்தை அனுசரிக்குமாறும், பொது சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு துறையில் நீண்ட கால பலன்களை உறுதி செய்யுமாறும் அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேச அரசுகளை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் கேட்டுக்கொண்டது. யோகா தின கொண்டாட்டங்களில் அதிகம் பேர் கலந்து கொள்வதை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகளும் இதர பங்குதாரர்களும் எடுத்தனர்.

கொவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக, தங்களது வீடுகளில் மட்டுமில்லாது அங்கன்வாடி மையங்களிலும் மக்கள் யோகா பயிற்சிகளில் ஈடுபட்டனர். கள பணியாளர்கள் மற்றும் பயனாளிகளை ஊக்கப்படுத்துவதற்காக, #BeWithYogaBeAtHome எனும் ஹேஷ்டேகும் அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1729784

*****************


(Release ID: 1729845) Visitor Counter : 196