அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு ஒத்துழைப்பை அளிக்க பிரிக்ஸ் நாடுகள் ஒருமனதாக சம்மதம்

Posted On: 23 JUN 2021 4:34PM by PIB Chennai

11-ஆவது பிரிக்ஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வழிகாட்டு குழு கூட்டத்தில் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு ஒத்துழைப்பை அளிக்க பிரிக்ஸ் நாடுகள் ஒருமனதாக சம்மதம் தெரிவித்துள்ளன. இந்தியா முன்வைத்துள்ள இந்தத் திட்ட முன்மொழிவு, பிரிக்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான தொழில் முனைவு பணிக்குழுவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு விரிவான செயல்திட்டம் குறித்து விவாதிக்கப்படும்.

பிரிக்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கான நடவடிக்கைகளை அமல்படுத்துவது தொடர்பாக ஜூன் 22 அன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பிரிக்ஸ் புதிய கண்டுபிடிப்புகளுக்கான ஒத்துழைப்பு 2021-24-ற்கான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. பிரிட்ஜ் இளம் விஞ்ஞானி மாநாடு, பிரிக்ஸ் உயர் அதிகாரிகள் கூட்டம் மற்றும் பிரிக்ஸ் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர்களுக்கு இடையேயான கூட்டம், இந்திய தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் பிரிக்ஸ் கூட்டணி மற்றும் 2021-ஆம் ஆண்டுக்கான திட்ட முன்மொழிவுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பிரிக்ஸ் அறிவியல் சார்ந்த அமைச்சகங்களின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொண்டனர்.

இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கூட்டத்தில் இந்திய தரப்பிலிருந்து ஆலோசகரும் சர்வதேச ஒத்துழைப்புக்கான தலைவருமான திரு சஞ்சீவ் குமார் வர்ஷ்னே கலந்து கொண்டு கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புத் துறை, இந்திய தொழில்துறை கூட்டமைப்பும் இந்தக் ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டன. அமைச்சர்கள் அளவிலான கூட்டம் மற்றும் பிரிக்ஸ் உச்சி மாநாடு ஆகியவற்றை உள்ளடக்கிய துறைகள் ரீதியான தொடர் நிகழ்வுகளின் அங்கமாக இந்தக் கூட்டம் நடைபெற்றது.

6-ஆவது பிரிக்ஸ் இளம் விஞ்ஞானி உச்சிமாநாட்டை இந்த வருடம் செப்டம்பர் 13 முதல் 16-ஆம் தேதி வரை இந்தியா நடத்தவிருக்கிறது. இந்தியாவின் கோரிக்கையை ஏற்று மருத்துவம், எரிசக்தித் தீர்வு மற்றும் கணினி வாயிலான கண்காணிப்பு முறைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். இந்த மாநாடு குறித்த அறிவிப்பு ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729744

*****************


(Release ID: 1729824) Visitor Counter : 252