ரெயில்வே அமைச்சகம்
குஜராத்தில் வல்சாத் சாலை மேம்பால பணியை 20 நாளில் வெற்றிகரமாக முடித்தது இந்திய ரயில்வே
Posted On:
22 JUN 2021 3:34PM by PIB Chennai
குஜராத்தில், மேற்கு பிரத்தியேக சரக்கு ரயில் வழித்தடத்தில் உள்ள வல்சாத் சாலை மேம்பாலத்தை இடித்து விட்டு, புதிதாக கட்டும் பணியை இந்திய ரயில்வேயின் பொதுத் துறை நிறுவனமான டிஎப்சிசிஐஎல் 20 நாளில் வெற்றிகரமாக முடித்துள்ளது.
தெற்கு குஜராத்தில், வைதரனா - சச்சின் பகுதி இடைய பிரத்தியக சரக்கு ரயில் வழித்தடத்தை அமைப்பதில் குறுகலான வல்சாத் சாலை மேம்பாலம் தடையாக இருந்து வந்தது. இதை இடித்துவிட்டு மீண்டும் புதுப்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. மும்பை-தில்லி நெடுங்சாலையில் அமைந்துள்ள இந்த பாலத்தில் நெரிசலான போக்குவரத்து நிலவும் என்பதால், இங்கு பாலம் கட்டி முடிப்பது சவாலான பணியாக இருந்து வந்தது. கடந்த 2ம் தேதி இங்கு போக்குவரத்து நிறுத்தப்பட்டு 20 நாளில் புதிய சாலைப் பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
முன்கூட்டிய தயாரிக்கப்பட்ட 16 மீ X 10 மீ அளவில் கான்கிரீட் பாக்ஸ்கள், ராட்சத கிரேன்கள் மூலம் தூக்கி வைக்கப்பட்டு இந்த பாலப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கொவிட் ஊரடங்கு மற்றும் பயண கட்டுப்பாடுகளுக்கு இடையிலும், மூத்த இன்ஜினியர்கள் உட்பட 150 பேர் கொண்ட குழுவினர். இரவு பகலாக பணியாற்றி இந்த பாலத்தை கட்டி முடித்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729380
*****************
(Release ID: 1729473)