சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல்: பொய்களும் உண்மைகளும்
Posted On:
21 JUN 2021 5:42PM by PIB Chennai
குழந்தை பெறும் வயதில் உள்ளவர்களிடையே கொவிட் தடுப்பு மருந்தின் காரணமாக மலட்டுத்தன்மை ஏற்படுமென்று சில ஊடக செய்திகள் தெரிவித்துள்ளன.
சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களில் ஒரு பிரிவினரிடையே பல்வேறு மூடநம்பிக்கைகள் மற்றும் பொய் தகவல்கள் பரவி கிடப்பதாகவும் கடந்த சில நாட்களாக செய்திகள் தெரிவித்தன.
தற்போதுள்ள எந்த தடுப்பு மருந்தும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தாது என்றும், விலங்குகள் மற்றும் மனிதர்கள் மீது பரிசோதித்து பக்க விளைவிகள் இல்லை என்று உறுதியான பின்னரே அவற்றுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தடுப்பு மருந்து பற்றி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான விடைகளை https://www.mohfw.gov.in/pdf/FAQsforHCWs&FLWs.pdf எனும் முகவரியில் காணலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1729100
----
(Release ID: 1729219)
Visitor Counter : 258