சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

நாட்டில் கொவிட் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 கோடியை கடந்தது

प्रविष्टि तिथि: 21 JUN 2021 11:16AM by PIB Chennai

குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக, நாட்டில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை நேற்று 28 கோடியை கடந்தது. இன்று காலை 7 மணி வரை கிடைத்த தகவல்படி, 38,24,408 அமர்வுகள் மூலம் மொத்தம் 28,00,36,898 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.   கடந்த 24 மணி நேரத்தில்  30,39,996 தடுப்பூசிகள் போடப்பட்டன

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 53,256 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டது. கடந்த 88 நாட்களில் இது மிக குறைவான அளவு. நாட்டின் தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து குறைகிறது.

தொடர்ந்து 14 நாட்களாக, தினசரி கொவிட் பாதிப்பு 1 லட்சத்துக்கு கீழ் உள்ளது. மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நடவடிக்கையில் பாதிப்பு குறைந்துள்ளது.

நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று, 7,02,887-ஆக உள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில், கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, 26,356 குறைந்தது. கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் சதவீதம், தற்போது மொத்த பாதிப்பில் 2.35 சதவீதமாக உள்ளது.

கடந்த 39 நாட்களாக, கொவிட் பாதிப்பில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை, தினசரி கொவிட் பாதிப்பை விட அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 78,190 பேர் குணமடைந்துள்ளனர். தினசரி கொவிட் பாதிப்பை விட சுமார் 25,000 (24,934) பேர் அதிகமாக குணமடைந்துள்ளனர்.

இதுவரை 2,88,44,199 பேர் கொவிட் பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்கடந்த 24 மணி நேரத்தில் 78,190  பேர் குணமடைந்துள்ளனர்இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த சதவீதம் 96.36.   

கடந்த 24 மணி நேரத்தில் 13,88,699 கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை மொத்தம் 39.24 கோடி கொவிட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1728946

 

-----


(रिलीज़ आईडी: 1729039) आगंतुक पटल : 238
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati , Odia , Malayalam