குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்

சர்வதேச யோகா தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 20 JUN 2021 5:45PM by PIB Chennai

சர்வதேச யோகா தினம் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு எம். வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது - 

‘‘யோகா ஒரு ஒளி, அது ஒரு முறை ஒளிர்ந்தால், ஒரு போதும் மங்காது.
 நீங்கள் சிறப்பாக பயிற்சி செய்தால், சுடர் பிரகாசமாக இருக்கும்.’’ என 
- பி.கே.எஸ் அய்யங்கார் கூறியுள்ளார். 
சர்வதேச யோகா தினத்தில்,  நமது வாழ்வை உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் பிரகாசிக்கச் செய்ய தினந்தோறும் யோகா செய்வோம் என உறுதி ஏற்போம். 

அனைவரின் நலனும் முக்கியம் என்பதை உலகம் உணரும்படி செய்துள்ளது கொரோனா தொற்று. யோகா எளிமையான மற்றும் சக்தி வாய்ந்த பயிற்சி. இது நமது ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக மேம்படுத்துகிறது. மனித இனத்துக்கு இந்தியா கொடுத்த பரிசு யோகா, இது உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோரின் வாழ்க்கையை மாற்றுகிறது என்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.  

                                                                                    ------


(रिलीज़ आईडी: 1728834) आगंतुक पटल : 316
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Telugu