தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் ஏப்ரல் மாதம் புதிதாக இணைந்தவர்களின் எண்ணிக்கை 12.76 லட்சம்
Posted On:
20 JUN 2021 5:09PM by PIB Chennai
இன்று (ஜூன் 20, 2021) வெளியிடப்பட்ட பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் தரவுகளின்படி, 2021 ஏப்ரல் மாதம் சுமார் 12.76 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். கொவிட்-19 பெருந்தொற்றுக்கு இடையிலும், 11.22 லட்சம் நிகர உறுப்பினர்களை இந்த நிறுவனம் இணைத்து, சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் 13.73%-ஐ அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 87,821 ஆகக் குறைந்து, மீண்டும் இணைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 92,864 ஆக அதிகரித்துள்ளது.
இந்த மாதத்தில் புதிதாக சேர்ந்துள்ள 12.76 லட்சம் சந்தாதாரர்களில் சுமார் 6.89 லட்சம் புதிய உறுப்பினர்கள், பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சமூக பாதுகாப்பு வரம்பிற்குள் முதன் முறையாக இணைந்துள்ளனர். சுமார் 5.86 லட்ச நிகர சந்தாதாரர்கள் வெளியேறி, பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் வரம்பிற்குள் இயங்கும் வேறு நிறுவனங்களில் இணைந்து மீண்டும் இந்த நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர்.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன மொத்த உறுப்பினர் சேர்க்கையில் மகாராஷ்டிரா, ஹரியானா, குஜராத், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து இந்த மாதத்தில் சுமார் 7.58 லட்சம் (59.41%) சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் வடகிழக்கு மாகாணங்களில் புதிதாக இணைந்துள்ள நிகர சந்தாதாரர்களின் எண்ணிக்கை சராசரி வளர்ச்சியை விட அதிகமாகப் பதிவாகியுள்ளது.
பணியாளர் ஆவணங்கள் புதுப்பிக்கப்படுவது தொடர்ச்சியான நடைமுறை என்பதால் பணியாளர் வைப்பு நிதி நிறுவனத்தின் தரவு தற்காலிகமானதே. எனவே முந்தைய மாதத்தின் தரவு புதுப்பிக்கப்படும். ஏப்ரல் 2018 முதல் இந்த நிறுவனம், செப்டம்பர் 2017 காலத்தை உள்ளடக்கிய புதிய தகவல்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1728788
----
(Release ID: 1728821)
Visitor Counter : 214