சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொவிட்-19 பற்றிய அண்மைத் தகவல்கள்
Posted On:
19 JUN 2021 9:03AM by PIB Chennai
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7,60,019 ஆகக் குறைந்துள்ளது.
இந்த எண்ணிக்கை 74 நாட்களுக்கு பிறகு மிகவும் குறைவாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 60,753 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நம் நாட்டில் இதுவரை 2,86,78,390 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 97,743 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள்.
தொடர்ந்து 37-வது நாளாக, புதிய பாதிப்புகளை விட தினசரி குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குணமடைந்தவர்களின் விழுக்காடு 96.16 சதவீதமாக அதிகரித்துள்ளது.
வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 3.58 சதவீதமாக உள்ளது.
தினசரி தொற்று உறுதி வீதம் தொடர்ந்து 12 நாட்களாக 5 சதவீதத்திற்கும் குறைவாக 2.98 சதவீதமாக பதிவாகியுள்ளது.
இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 38.92 கோடியாக அதிகரித்துள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 27.23 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1728423
*****************
(Release ID: 1728535)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam