இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்

விளையாட்டு விருதுகள் 20201-க்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி ஜூன் 28 வரை நீட்டிப்பு

Posted On: 18 JUN 2021 5:05PM by PIB Chennai

2021-ம் ஆண்டுக்கான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுகள், அர்ஜுனா விருது, துரோணாச்சார்யா விருது, தியான் சந்த் விருது, ராஷ்டிரிய கேல் புரோத்சஹன் புரஸ்கார் மற்றும் மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பைக்கான விண்ணப்பங்கள்/பரிந்துரைகளை 2021 மே 19 மற்றும் 20 அன்று இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் வரவேற்றது.

அமைச்சகத்தின் இணையதளமான www.yas.nic.in-ல் அறிவிப்புகள் பதிவிடப்பட்டன.

விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 2021 ஜூன் 21-ல் இருந்து 2021 ஜூன் 28 வரை (திங்கட்கிழமை) நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழங்களிடையே இருந்து விண்ணப்பங்கள்/பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை surendra.yadav[at]nic[dot]in அல்லது girnish.kumar[at]nic[dot]in எனும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். இந்திய ஒலிம்பிக் சங்கங்கள், இந்திய விளையாட்டு ஆணையம், அங்கீகாரம் பெற்ற விளையாட்டு கூட்டமைப்புகள், விளையாட்டு மேம்பாட்டு வாரியங்கள் மற்றும் மாநில யூனியன் பிரதேச அரசுகளுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021 ஜூன் 28-க்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்புகளைக் காணவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1728233

*****************


(Release ID: 1728294) Visitor Counter : 212