எரிசக்தி அமைச்சகம்

பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடைய எரிசக்தி சேமிப்பு நடவடிக்கைகள்: மத்திய அமைச்சர் திரு ஆர் கே சிங் தலைமையில் உயர்நிலை ஆய்வுக்கூட்டம்

Posted On: 17 JUN 2021 9:18AM by PIB Chennai

மத்திய எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இணை அமைச்சரும் (தனி பொறுப்பு), திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு இணை அமைச்சருமான திரு ஆர் கே சிங், பல்வேறு எரிசக்தி சேமிப்புத் திட்டங்களின் வளர்ச்சி குறித்தும் பருவநிலை மாற்ற செயல்பாடுகளுக்கான தயார்நிலை குறித்தும் இன்று நடைபெற்ற உயர்நிலை ஆய்வுக் கூட்டத்திற்குக் காணொலி வாயிலாகத் தலைமை தாங்கினார்.

கரியமில வாயுவின் வெளியேற்றத்தைக் குறைக்கும் நோக்கத்தோடு எரிசக்தி சேமிப்புத் துறையில் நாடு முழுவதும்  மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி விவாதிப்பதற்காக இந்த உயர்நிலைக் கூட்டம் நடத்தப்பட்டது.

போக்குவரத்து, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் எரிசக்தி ஆலைகள் உள்ளிட்ட வெளியீடுகள் அதிகம் உள்ள துறைகளில் கவனம் செலுத்துமாறு அமைச்சர் உத்தரவிட்டார். நாடுமுழுவதும் தொடர்ச்சியான எரிசக்தி பாதுகாப்புத் திட்டங்களை அமல்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ரோஷனீ என்ற இயக்கத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அவர் ஆலோசனை நடத்தினார்.

எரிசக்தி வீணாவதை குறைப்பதற்குத் தேவையான முறையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சகங்களுக்கு அவர் அறிவுறுத்தினார். குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் போன்ற துறைகளில், குறைந்த அளவுள்ள கரியமில தொழில்நுட்பங்களை பயன்படுத்துமாறும் அவர் தெரிவித்தார். மின்சார இயக்கத்திறனை மேலும் தீவிரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று அவர் அனைத்து துறைகளுக்கும் உத்தரவிட்டார்.

அனைத்து எரிசக்தி சேமிப்புத் திட்டங்களை சிறப்பாக அமல்படுத்துவதற்காக, எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் பொதுத்துறை நிறுவனமாக இயங்கும் எரிசக்தி சிக்கனத்துக்கான அலுவலகத்தில் அமைப்புசார் முறைகள் வலுப்படுத்தப்படும் என்றார் அவர். எரிசக்தி சேமிப்பு நடவடிக்கைகளை அதிகரிப்பதற்காக மாநில முகமைகளும் வலிமைபடுத்திக்கொள்ள வேண்டும். கீழ்க்காணும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தினார்:

• படிப்படியான மின்மயமாக்கல்: சாத்தியக்கூறுகள் உள்ள துறைகளை கண்டறிவதற்கான விரிவான செயல்திட்டத்தை வடிவமைத்தல்.

•    பசுமை வழி மின்சாரம்: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஏற்கனவே ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது.

• எரிசக்தி சேமிப்பு மற்றும் குறைந்த அளவிலான கரியமில தொழில்நுட்பங்கள் சார்ந்த திட்டங்களை அமல்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட அமைச்சகங்களின் உறுப்பினர்கள் அடங்கிய குழு அமைக்கப்படவுள்ளது.

•    எரிசக்தி சிக்கனத்துக்கான அலுவலகம் மற்றும் மாநிலங்களின் நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்துதல்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727776

-----



(Release ID: 1727884) Visitor Counter : 187