சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட் தடுப்பூசி குறித்த உண்மை நிலவரம்

Posted On: 16 JUN 2021 1:01PM by PIB Chennai

கோவேக்சின் தடுப்பூசியில், புதிதாகப் பிறந்த கன்றின் ரத்தத்தில் இருந்து பெறப்படும் திரவம் பயன்படுத்தப்படுவதாக ஒரு சில சமூக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுபோன்ற செய்திகளில், உண்மைத் தகவல்கள் திரித்து, தவறாக  சித்தரிக்கப்பட்டுள்ளன.

வெரோ உயிரணுக்களின் தயார்நிலை/வளர்ச்சியில் மட்டுமே பிறந்த கன்றின் ரத்தத்திலிருந்து பெறப்படும் திரவம் பயன்படுத்தப்படுகிறது. எருது மற்றும் இதர விலங்குகளின் ரத்தத்திலிருந்து பெறப்படும் திரவம், வெரோ உயிரணுக்களின் வளர்ச்சிக்காக சர்வதேச அளவில் முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. தடுப்பூசியின் உற்பத்திக்கு உதவும் உயிரணுக்களுக்கு உயிரூட்டுவதில் வெரோ உயிரணுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நடைமுறை பல தசாப்தங்களாக போலியோ, ராபீஸ் போன்ற தடுப்பு மருந்துகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நோய்க்கிருமிகள் வளர்ச்சி அடையும் போது இந்த வெரோ உயிரணுக்கள் முழுவதும் அழிந்துவிடும். அதன் பிறகு வளர்ச்சி அடைந்த நோய் கிருமியும் அழிந்துவிடும். இவ்வாறு கொல்லப்பட்ட நோய்க்கிருமிகள், இறுதிகட்ட தடுப்பூசியின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றன. இறுதி கட்ட தடுப்பூசி உருவாக்கத்தில் கன்றின் உதிரத்தில் இருந்து பெறப்படும் திரவம் பயன்படுத்தப்பட மாட்டாது.

எனவே இறுதிக்கட்டத் தடுப்பூசியில் (கோவேக்சின்) புதிதாகப் பிறந்த கன்றின் ரத்தத்தில் இருந்து பெறப்படும் திரவம் பயன்படுத்தப்படவில்லை. இந்த திரவம் இறுதிகட்ட தடுப்பூசியின் முக்கிய மூலப் பொருளும் அல்ல.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

 https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727462

 

-----

 



(Release ID: 1727555) Visitor Counter : 285