ரெயில்வே அமைச்சகம்

இந்திய ரயில்வேக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் ரயில்வே செயல்பாடுகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக நவீன சிக்னல் தீர்வுகள்

Posted On: 15 JUN 2021 3:50PM by PIB Chennai

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சேவைகள் ஆகியவற்றுக்காக 700 மெகா ஹெர்ட்ஸ் அதிர்வெண் கட்டில், 5 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை இந்திய ரயில்வேக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நீண்ட கால மேம்பாடு அடிப்படையிலான நகரும் ரயில் வானொலி தகவ்ல் தொடர்பை இந்த அலைக்கற்றையை கொண்டு வழங்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள முதலீடு ரூ 25,000 கோடிக்கும் அதிகமாகும். ஐந்து வருடங்களில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும். ரயில்வே செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பில் மிகப்பெரிய மாற்றத்தை இது கொண்டு வரும். பாதுகாப்பை அதிகரிப்பதோடு, தற்போதைய உள்கட்டமைப்பிலேயே அதிக ரயில்களை இயக்கவும் இது உதவும்.

ரயில் செயல்பாடுகளின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்தவும், கூடுதல் திறனை உருவாக்கவும், கீழ்கண்டவற்றை உள்ளடக்கி சிக்னல் அமைப்பின் நவீனமயப்படுத்தல் செய்யப்பட்டு வருகிறது:

1. டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் பலனை பெறுவதற்காக மின்னணு இன்டர்லாக்கிங் முறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2021 ஏப்ரல் 30 வரை 2221 நிலையங்களில் (இந்திய ரயில்வேயில் 34%) இது நிறுவப்பட்டுள்ளது. வருங்காலத்திலும் இந்த வசதியை வழங்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று வருடங்களில் 1550 மின்னணு இன்டர்லாக்கிங் வசதிகள் வழங்கப்படும். ரயில் செயல்பாடுகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை இது அதிகரிக்கும்.

2. இந்திய ரயில்வேயின் தற்போதைய அதிக போக்குவரத்து கொண்ட வழித்தடங்களில் இன்னும் அதிக ரயில்களின் இயக்கும் வகையில் திறனை மேம்படுத்தும் நோக்கில், 2021 ஏப்ரல் 30 வரை தானியங்கி பிளாக் சிக்னல் முறை 3447 ரூட் கிலோமீட்டர்களில் நிறுவப்பட்டுள்ளது. 15000 ரூட் கிலோமீட்டர்களில் இதை நிறுவ ரயில்வே திட்டமிட்டுள்ளது.

3. இருப்புப்பாதை சந்திக் கடவில் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், 11705 லெவல் கிராசிங்குகளுடன் சிக்னல்களை இன்டர்லாக்கிங் முறையில் 2021 ஏப்ரல் 30 வரை இந்திய ரயில்வே இணைத்துள்ளது.

4. லோகோ பைலட்டுகளுக்கு உதவுவதற்காக ஏடிபி முறையை உலகெங்கும் உள்ள ரயில்வேக்கள் பயன்படுத்தி வருகின்றன. பாதுகாப்பை மேம்படுத்துவ்தற்காக இந்திய ரயில்வேயிலும் இதை விரைவில் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஏடிபி அமைப்புகளுக்காக வெளிநாட்டு தொழில்நுட்பத்தை இந்திய ரயில்வே இது வரை சார்ந்திருந்த நிலையில், டிசிஏஎஸ் எனும் விலை குறைந்த உள்நாட்டு (ரயில் மோதல் தடுப்பு) தொழில்நுட்பத்தை இந்திய நிறுவனங்கள் தற்போது வெற்றிகரமாக உருவாக்கியுள்ளன. முதல் கட்டமாக, 37300 ரூட் கிலோமீட்டர்களில் இதை நிறுவ ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தற்சார்பு இந்தியா இயக்கத்திற்கு ஊக்கமளிக்கும் விதத்தில், ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சேவைகள் ஆகியவற்றுக்காக 700 மெகா ஹெர்ட்ஸ் அதிர்வெண் கட்டில், 5 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை இந்திய ரயில்வேக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727213

                                                                                   ------



(Release ID: 1727310) Visitor Counter : 173