நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
நஃபேட் செறிவூட்டப்பட்ட அரிசித் தவிட்டு எண்ணெய் அறிமுகம்
प्रविष्टि तिथि:
15 JUN 2021 3:59PM by PIB Chennai
“நஃபேட் செறிவூட்டப்பட்ட அரிசித் தவிட்டு எண்ணெயை” உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் செயலாளர் திரு சுதான்சு பாண்டே இன்று காணொலி வாயிலாக அறிமுகப்படுத்தினார். தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பான நஃபேடின் இந்த முன்முயற்சி, எதிர்காலத்தில் சமையல் எண்ணெயின் இறக்குமதி மீதான சார்பைக் குறைக்கும் என்று திரு சுதன்சு பாண்டே கூறினார். இதன் மூலம் இந்திய சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கு அதிக வாய்ப்புகள் உருவாக்கப்படுவதுடன், பிரதமரின் தற்சார்பு இந்தியா திட்டமும் வலுவடையும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த அரிசித் தவிட்டு எண்ணெயை நஃபேட் நிறுவனம் சந்தைப்படுத்தும்.
செறிவூட்டப்பட்ட அரிசியின் உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்துதலுக்காக நஃபேட் மற்றும் இந்திய உணவுக் கழகத்திற்கு இடையே அண்மையில் ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக இந்திய உணவுக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727214
-----
(रिलीज़ आईडी: 1727303)
आगंतुक पटल : 307