அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை

இளம் இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு ஜெர்மானிய தொழில்துறை மற்றும் ஆராய்ச்சி அமைப்புகள் குறித்த புரிதல் ஏற்படுவதற்கான திட்டம் தொடக்கம்

Posted On: 15 JUN 2021 2:19PM by PIB Chennai

இந்திய-ஜெர்மன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் 11-வது நிறுவன தினத்தை முன்னிட்டு இந்திய-ஜெர்மன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய தொழில்துறை பயிற்சி திட்டத்தை இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை செயலாளர், பேராசிரியர் அசுதோஷ் சர்மா 2021 ஜூன் 14 அன்று தொடங்கி வைத்தார்.

இத்திட்டம் திறன் வளர்த்தலை ஊக்குவிப்பதோடு, தொழில்துறை எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அவற்றுக்கான ஆராய்ச்சி தீர்வுகள் குறித்து மாணவர்களை சிந்திக்க வைக்கும். ஆராய்ச்சி பயன்பாடு, தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவற்றை ஊக்குவிப்பதோடு ஜெர்மானிய தொழில்துறை அனுபவத்தை இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு இது வழங்கும்,” என்று பேராசிரியர் அசுதோஷ் சர்மா கூறினார்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் செயலாற்றும் இளம் இந்திய முனைவர் பட்ட மாணவர்கள் மற்றும் முனைவர் பட்டத்திற்கு பிந்தைய ஆராய்ச்சியாளர்களுக்கு ஜெர்மானிய தொழில்துறை மற்றும் தொழில்துறைக்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் குறித்த அனுபவத்தை இந்திய-ஜெர்மன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய தொழில்துறை பயிற்சி திட்டம் வழங்கும்.

அதிகபட்சம் ஒரு வருடத்திற்கான உதவித்தொகையுடன் வரும் இந்த பயிற்சி திட்டம், ஆராய்ச்சி செயல்பாடு மற்றும் திறன் வளர்த்தலில் இளம் இந்திய ஆராய்ச்சியாளர்களை ஊக்குவித்து, ஜெர்மானிய தொழில்துறை சூழலியல் குறித்த அனுபவத்தை வழங்கி புதுமைகளை படைப்பதற்கும், தொழிநுட்ப மேம்பாட்டிற்கும் வழிவகுக்கும்.

இந்திய-ஜெர்மன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய ஆட்சி மன்ற குழுவின் தலைவர்கள், உறுப்பினர்கள், இந்திய மற்றும் ஜெர்மன் அரசின் பிரதிநிதிகள், தொழில்துறையினர் மற்றும் கல்வியாளர்கள் முன்னிலையில் காணொலி முறையில் இத்திட்டம் தொடங்கப்பட்டது.

பிரிவுகள், தகுதி, உதவித்தொகை மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்த மேலும் தகவல்களை www.igstc.org எனும் இணைய முகவரியில் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1727189

                                                                                                                                    -----

 



(Release ID: 1727262) Visitor Counter : 168