எரிசக்தி அமைச்சகம்

ஹைட்ரஜன் எரிபொருள் மின்கலம் அடிப்படையிலான சோதனைத் திட்டங்களை மேற்கொள்ள விரும்பும் நிறுவனங்களின் விண்ணப்பங்களை வரவேற்கிறது தேசிய அனல் மின் கழகம்

Posted On: 14 JUN 2021 11:27AM by PIB Chennai

மத்திய எரிசக்தி அமைச்சகத்தின் கீழ் இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த எரிசக்தி நிறுவனமாக இயங்கும் தேசிய அனல் மின் கழகம், தனது வளாகங்களில் மின்பகுப்பானைப் பயன்படுத்தி ஹைட்ரஜனை உருவாக்கும்  தனித்தியங்கும் எரிபொருள்- மின்கலம் அடிப்படையிலான மறு பிரதி எரிசக்தி முறை மற்றும் தனித்தியங்கும் எரிபொருள்- மின்கலம் அடிப்படையிலான குறுந்தொகுப்பு முறை ஆகிய இரண்டு திட்டங்களை மேற்கொள்ள விரும்பும் நிறுவனங்களின் விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. 

இந்தத் திட்டங்களின் வாயிலாக பசுமையான மற்றும் தூய்மையான எரிபொருளை வழங்கும் முயற்சியை தேசிய அனல் மின் கழகம் வலுப்படுத்தவுள்ளது. இரண்டு திட்டங்களை அமல்படுத்துவதிலும், அவற்றை  வணிகரீதியாக முன்னெடுத்துச் செல்லும் பணிகளிலும் இந்த நிறுவனம் ஒருங்கிணைந்து செயல்படும்.

ஹைட்ரஜன் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் தேசிய அனல் மின் கழகத்தின் முன்முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. மின் உற்பத்தி நிலைய எரிபொருள் வாயுவிலிருந்து கரிமம் பற்றுகை மற்றும் மின்னாற்பகுப்பிலிருந்து ஹைட்ரஜனையும் ஒருங்கிணைத்து மெத்தனாலை உருவாக்கும் சோதனை முயற்சியையும் இந்த நிறுவனம் ஏற்கனவே தொடங்கியுள்ளது. இது, கரிமம் பற்றுகை மற்றும் பசுமை ஹைட்ரோ கார்பன் கலவைத் துறையில் “தற்சார்பு இந்தியாவை” நோக்கிய ஆற்றல் வாய்ந்த தீர்வாகும்.

இந்த முன்முயற்சியின் அடிப்படையில், மறுபிரதி எரிசக்திக்குத் தேவையான ஹைட்ரஜனை அடிப்படையாகக் கொண்ட எரிபொருள் மின்கலம் -மின்பகுப்பானின் பயன்பாடு குறித்து தேசிய அனல் மின் கழகம் ஆய்வு செய்து வருகிறது. தற்போது டீசலை அடிப்படையாகக்கொண்ட எரிசக்தி மின்னியற்றிகளின் மூலம் மறுபிரதி எரிசக்தித் தேவை மற்றும் குறுந்தொகுப்பு செயல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. டீசல் மின்னியற்றிகளுக்கு மாற்றான பசுமை தீர்வுகளாக இந்தத் திட்டங்களை தேசிய அனல்மின் கழகம் கருதுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1726878

************************(Release ID: 1726931) Visitor Counter : 331