இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்

கொவிட்-19 மருத்துவமனைகள் நீட்டிப்பு திட்டம்: தனியார் அமைப்புகளிடம் நிதி உதவி கேட்கிறது முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம்

Posted On: 13 JUN 2021 11:02AM by PIB Chennai

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பல திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கும்படி தனியார் நிறுவனங்கள், நன்கொடை அமைப்புகள் மற்றும் தனிநபர்களிடம் மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களில் மருத்துவமனைகள் நீட்டிப்பு திட்டமும் ஒன்று. கொவிட் பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் சுமார் 50 மருத்துவமனைகள் தேவை என முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகம் அடையாளம் கண்டுள்ளது.  

சென்னை ஐஐடியில் உருவாக்கப்பட்ட மாடுலஸ் ஹவுசிங்தொடக்க நிறுவனம்  பிற இடங்களுக்கு எடுத்து செல்லக் கூடிய வகையில் மெடிகேப் மருத்துவமனைகளைஉருவாக்கியுள்ளது. இதன் மூலம் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகளை, 3 வாரத்தில் ஏற்படுத்த முடியும். இந்த மெடிகேப் மருத்துவமனைகளில் பிரத்தியேக ஐசியு பிரிவு மற்றும் உயிர் காக்கும் அனைத்து மருத்துவ சாதனங்களும் உள்ளன.

இந்த தற்காலிக மருத்துவ கூடாரங்கள் சுமார் 25 ஆண்டுகள் வரை உழைக்கும். எதிர்காலத்தில், வேறு ஏதாவது பேரிடர் ஏற்பட்டாலும், இந்த மருத்துவமனைகளை ஒரு வாரத்துக்குள் வேறு இடங்களுக்கு மாற்ற முடியும். கொவிட்டுக்கு எதிரான போராட்டத்தில், சிறுநகரங்கள் மற்றும் கிராமங்களில்  சுகாதார கட்டமைப்பில் உள்ள இடைவெளியை இந்த மருத்துவமனைகள் போக்கும். நாடு முழுவதும் இதுபோன்ற மருத்துவமனைகளை அமைப்பதற்கு பெறுநிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதியை(சிஎஸ்ஆர்) பெறுவதில் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 

இத்திட்டம் பற்றி கேட்க industry-engagement[at]psa[dot]gov[dot]in என்ற இ-மெயில் முகவரிக்கு கடிதம் எழுதலாம்.

கொவிட்-19 திட்டங்கள் பற்றி மேலும் விவரங்கள் அறிய  https://www.psa.gov.in/innovation-science-bharat  என்ற இணையதளத்தை பார்க்கவும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1726726

*****************



(Release ID: 1726768) Visitor Counter : 221