தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்
நகராட்சி அமைப்புகளில் பணிபுரியும் தற்காலிக மற்றும் ஒப்பந்ததார பணியாளர்கள், தொழிலாளர் அரசு காப்பீட்டு திட்டத்தில் சேர்ப்பு
Posted On:
10 JUN 2021 3:59PM by PIB Chennai
தொழிலாளர் அரசு காப்பீட்டு திட்ட சட்டம் 1948 இன் கீழ் நாடு முழுவதும் உள்ள நகராட்சி அமைப்புகளில் பணிபுரியும் தற்காலிக மற்றும் ஒப்பந்ததார பணியாளர்களையும் கொண்டுவரும் முடிவை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு சந்தோஷ் கங்வார் இன்று அறிவித்தார்.
இதுதொடர்பாக மாநிலங்களின் அதிகார எல்லைக்கு உட்பட்ட நகராட்சிக் கழகங்கள்/ மன்றங்களில் பணிபுரியும் தற்காலிக மற்றும் ஒப்பந்ததார பணியாளர்களையும் இந்தச் சட்டத்தின் கீழ் கொண்டுவருவது தொடர்பான அறிவிக்கையை வெளியிடுவது பற்றி மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிடம் ஆலோசிக்குமாறு தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்திற்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டச் சட்டம், 1948-இன் கீழ் மத்திய அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள செயலாக்கத் துறைகளில் இடம்பெறும் தற்காலிக மற்றும் ஒப்பந்ததார பணியாளர்கள்/ முகமைகள்/ நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு இந்த பலன் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் நகராட்சி அமைப்புகளில் பணியாற்றும் தற்காலிக மற்றும் ஒப்பந்ததார ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கப்படும் என்று திரு கங்வார் தெரிவித்தார். இதுபோன்ற பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சமூக மேம்பாட்டில் இந்தத் திட்டம் மிக முக்கிய பங்கு வகிக்கும்.
தொழிலாளர் அரசு காப்பீட்டு திட்டத்திற்கான அறிவிக்கையை சம்பந்தப்பட்ட மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் வெளியிட்டவுடன் இந்த சட்டத்தின்கீழ் உடல் நலமின்மை, மகப்பேறு, உடல் இயலாமை, ஈமச்சடங்குகளுக்கான கட்டணம் போன்ற பல்வேறு பயன்களைத் தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பெறுவார்கள். மிக முக்கியமாக, தொழிலாளர் அரசு காப்பீட்டு மருத்துவ வசதிகளை, அதாவது 160 மருத்துவமனைகள் மற்றும் சுமார் 1500 வைத்தியசாலைகளில் மருத்துவ சேவைகளைப் பெறுவதற்கும் அவர்கள் தகுதி பெறுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725955
-----
(Release ID: 1726026)
Visitor Counter : 293