பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

நுகர்வோர் விரும்பும் எந்த சமையல் எரிவாயு முகவரிடமும் சேவையை மாற்றிக் கொள்ளும் வசதி; கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களில் விரைவில் அறிமுகம்

प्रविष्टि तिथि: 10 JUN 2021 3:43PM by PIB Chennai

குறைந்த விலையில் எரிசக்தியை அனைவருக்கும் கிடைக்க செய்ய வேண்டும் என்ற மாண்புமிகு பிரதமரின் லட்சியத்தை தொடர்ந்தும், சமையல் எரிவாயு நுகர்வோருக்கு மேலும் அதிகாரமளிக்கும் நோக்குடனும், நுகர்வோர் விரும்பும் எந்த சமையல் எரிவாயு முகவரிடமும் சேவையை மாற்றிக் கொள்ளும் வசதியை அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், தங்கள் பகுதியில் உள்ள குறிப்பிட்ட எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனத்துடன் இணைந்துள்ள எந்த ஒரு விநியோகஸ்தரிடம் இருந்தும் சேவையை பெறும் வசதியை நுகர்வோர்கள் தேர்ந்தெடுக்கலாம்.

கோயம்புத்தூர், சண்டிகர், குர்கான், புனே மற்றும் ராஞ்சி ஆகிய நகரங்களில் முதலில் இத்திட்டம் தொடங்கப்பட உள்ளது.

தாங்கள் சேவை பெறும் எண்ணெய் நிறுவனங்களின் இணையதளங்கள் மற்றும் கைபேசி செயலிகள் மூலம் நுகர்வோர்கள் இந்த சேவையை பெறலாம்.

இந்த இலவச வசதியின் மூலம், வீட்டிலிருந்தவாறே தங்களது சமையல் எரிவாயு விநியோகஸ்தரை நுகர்வோர்கள் மாற்றிக்கொள்ள முடியும். 2021 மே மாதத்தில் 55759 விநியோகஸ்தர் மாற்றல் கோரிக்கைகள் எண்ணெய் நிறுவனங்களால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725944

-----


(रिलीज़ आईडी: 1725998) आगंतुक पटल : 321
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi