மத்திய அமைச்சரவை
700 மெகா ஹெர்ட்ஸ் கற்றையில் 5 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை இந்திய ரயில்வேக்கு ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ரயில் சேவைகளில் பாதுகாப்பு வலுவடையும்
ரயில்வேயின் இயக்கம் மற்றும் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும்
ரயில் ஓட்டுநர்கள், மெய்க்காப்பாளர்கள் இடையே சீரான தொடர்பு ஏற்பட்டு பாதுகாப்பு மேம்படுத்தப்படும்
செயல்பாட்டு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பான குரல், காணொளி மற்றும் தரவு சார்ந்த தொலைத்தொடர்பு சேவைகள் அளிக்கப்படும்
மொத்தத் திட்டத்திற்கு மதிப்பிடப்பட்டுள்ள முதலீடு சுமார் ரூ.25,000 கோடி
அடுத்த ஐந்து ஆண்டுகளில் திட்டம் நிறைவடையும்
பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ரயில்கள் மோதுவதை தடுப்பதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அமைப்பு முறைக்கு ரயில்வே ஒப்புதல்
Posted On:
09 JUN 2021 4:12PM by PIB Chennai
தற்சார்பு இந்தியா இயக்கத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக 700 மெகா ஹெர்ட்ஸ் கற்றையில் 5 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை இந்திய ரயில்வேக்கு ஒதுக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த அலைக்கற்றை வாயிலாக நீண்டகால பரிணாமத்தின் அடிப்படையில் வழித்தடங்களில் நடமாடும் ரயில் வானொலி தொலைத்தொடர்பை வழங்க இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு மதிப்பிடப்பட்டுள்ள முதலீடு சுமார் ரூ.25,000 கோடியாகும். அடுத்த 5 ஆண்டுகளில் இந்தத் திட்டம் நிறைவடையும்.
மேலும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விபத்துகளைக் குறைப்பதற்கு, ரயில்கள் மோதுவதைத் தடுப்பதற்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அமைப்பு முறைக்கும் இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்மூலம் ரயில்வேயின் இயக்கம் மற்றும் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும். தற்போது உள்ள உள்கட்டமைப்புகளைப் பயன்படுத்தி அதிக ரயில்களை இயக்குவதற்கு வழித்தடங்களை உயர்த்தி, பாதுகாப்பையும் இந்தத் திட்டம் மேம்படுத்தும்.
நவீன ரயில் இணைப்புகளின் வாயிலாக பயணக் கட்டணம் குறைவதுடன் செயல்திறனும் அதிகரிக்கும். ‘மேக் இன் இந்தியா' இயக்கத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் பன்னாட்டு தொழில்துறைகள் தங்களது உற்பத்தி நிலையங்களை உருவாக்கி வேலைவாய்ப்பை பெருக்கவும் இந்த நடவடிக்கை ஏதுவாக இருக்கும்.
செயல்பாட்டு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக பாதுகாப்பான குரல், காணொளி மற்றும் தரவு சார்ந்த தொலைத்தொடர்பு சேவைகளை அளிப்பதே நீண்டகால பரிணாம முயற்சிக்கான இந்திய ரயில்வேயின் முக்கிய நோக்கமாகும். நவீன மற்றும் ரயில் பாதுகாப்பு அமைப்பு முறைகளில் இவை பயன்படுத்தப்படுவதோடு, ரயில் ஓட்டுநர்கள், மெய்க்காப்பாளர்கள் இடையே சீரான தகவல் தொடர்பிற்கும் வழிவகுக்கும்.
தொலைதூரத்தில் உள்ள ரயில் பெட்டிகள், இன்ஜின்கள், சரக்கு பெட்டிகள், ரயில் பெட்டிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் வாயிலான நேரலை தகவல்கள் போன்ற இணையம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு தரமான, பாதுகாப்பான மற்றும் துரிதமான ரயில் சேவையை வழங்குவதற்கும் இந்த முயற்சி உதவிகரமாக இருக்கும்.
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயின் பரிந்துரைப்படி கட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டிற்கு உரிமைத் தொகை மற்றும் உரிம கட்டணங்களாக தொலைத்தொடர்புத்துறை விதித்துள்ள விதிமுறைகளின் அடிப்படையில் அலைக்கற்றைக்கான தொகை அமைந்திருக்கும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1725627
----
(Release ID: 1725709)
Visitor Counter : 297
Read this release in:
Marathi
,
English
,
Urdu
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam