சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

தடுப்புமருந்து குறித்த பொய்களை முறியடித்தல்: தாராளமயமாக்கப்பட்ட விலை நிர்ணயம், மேம்படுத்தப்பட்ட தேசிய யுக்தி தடுப்பூசி சமநிலையை உறுதி செய்தது

Posted On: 05 JUN 2021 7:42PM by PIB Chennai

உலகத்தின் மிகப்பெரிய கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கையை மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் நெருங்கி பணியாற்றி 2021 ஜனவரி 16 முதல் இந்திய அரசு செயல்படுத்தி  வருகிறது.

இந்தியாவின் தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கையில் சமமின்மை இருப்பதாக சில செய்திகள் வெளியாகியுள்ளன. இவை தவறானவை மற்றும் யூகங்களின் அடிப்படையிலானவை ஆகும்.

தாராளமயமாக்கப்பட்ட விலை நிர்ணய மற்றும் மேம்படுத்தப்பட்ட தேசிய கொவிட்-19 தடுப்புமருந்து வழங்கல் யுக்தி 2021 மே 1 முதல் செயல்படுத்தப்பட்டு, தற்போதைய மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கலுக்கு அது வழிகாட்டி வருகிறது.

தனியார் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் இந்த கொள்கையின் வாயிலாக, 25 சதவீத தடுப்பு மருந்துகள் தனியார் துறைக்கு ஒதுக்கப்பட்டு வருகின்றன.

தடுப்பு மருந்துக்கு கட்டணம் செலுத்தக்கூடியவர்கள் மற்றும் தனியார் மருத்துவமனைக்கு செல்ல விரும்புபவர்களுக்கு இதன் மூலம் தடுப்பூசி வசதி கிடைப்பதால், அரசு மையங்களின் மீது ஏற்படும் சுமை குறைகிறது.

2021 ஜூன் 1 வரை, 1.20 கோடி டோஸ்கள் தடுப்பு மருந்தை மே மாதத்தில் தனியார் மருத்துவமனைகள் பெற்றுள்ளன.  மே 2021 வரை சீரம் நிறுவனம் மற்றும் பாரத் பயோடெக்கை தொடர்பு கொண்ட அதிகளவிலான தனியார் மருத்துவமனைகளுக்கு கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் வழங்கப்பட்டுள்ளன. பெருநகரங்களில் மட்டுமல்லாது, நாடு முழுவதுமுள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் இந்த மருத்துவமனைகள் அமைந்துள்ளன.

தடுப்பு மருந்து வழங்கல் நடவடிக்கையை வெற்றிகரமானதாக ஆக்குவதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நெருங்கி பணியாற்றி வருகிறது.

குறைந்த அளவில் தனியார் மருத்துவமனைகள் உள்ள மாநிலங்களின் நிலைமையை ஆய்வு செய்து தக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1724784

*****************


(Release ID: 1724810) Visitor Counter : 270